இனி வீட்டுக்கு வீடு இதுதான்.. ரூ.10999-க்கு ரெட்மி ஃபயர் டிவி.. டால்பி ஆடியோ.. வாய்ஸ் ரிமோட். எந்த மாடல்?
வீட்டில் இருக்கும் பழைய டிவிகளை மாற்ற வைக்கும்படியான பட்ஜெட்டில், பெசல்-லெஸ் டிசைன் மட்டுமல்லாமல், விவிட் பிக்சல் என்ஜின், டால்பி ஆடியோ, லோவ் லேட்டன்சி மோட், வாய்ஸ் ரிமோட், 8 ஜிபி மெமரி, 1 ஜிபி ரேம், ஃபயர் டிவி ஓஎஸ் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் 32 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 (Redmi Smart Fire TV 2024) வெளியாகி இருக்கிறது. இந்த டிவியின் பீச்சர்கள், விற்பனை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 அம்சங்கள் (Redmi Smart Fire TV 2024 Specifications): இந்த டிவியில் 32 இன்ச் (1366 × 768 பிக்சல்கள்) எச்டி-ரெடி டிஸ்பிளே ( HD-Ready Display) வருகிறது. இந்த டிவியில் 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) சப்போர்ட் வருகிறது.

ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) கொண்டிருக்கிறது. ஆகவே, வீடியோ குவாலிட்டி பட்ஜெட்டை விட கூடுதல் அவுட்புட் கொடுக்கும். இந்த ரெட்மி டிவியில் 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. ஃபயர் டிவி ஓஎஸ் 7 (Fire TV OS 7) கொண்ட குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 (Quad-core Cortex A35) சிப்செட் வருகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஃபயர் டிவி ஓஎஸ் மூலம் 12000 ஆப்கள் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
அதேபோல மிராகாஸ்ட் (Miracast), ஏர்பிளே (AirPlay) போன்ற ஸ்கிரீன் காஸ்டிங் (Screen Casting) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியின் ஆடியோவை பொறுத்தவரையில், 10W ஸ்பீக்கர்கள் 2 வருகின்றன. டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட் உள்ளது.
இந்த டிவியின் கனெக்டிவிட்டிவை பார்க்கையில், வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) வருகிறது. அதேபோல எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யுஎஸ்பி போர்ட் (USB Port), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஈதர்நெட் (Ethernet) போன்ற வயர்டு கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன.
இந்த பட்ஜெட்டிலும் வாய்ஸ் ரிமோட் (Voice Remote) கொண்டிருக்கிறது. அலெக்சா (Alexa) வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது. மிட்-ரேஞ்ச் டிவிகளை போல ஓடிடி ஷார்ட்கட் பட்டன்களுடன் ரிமோட் வருகிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும், ரூ.1000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வர இருக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு (ICICI Bank Cards) இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ரூ.10000 பட்ஜெட்டில் பெசல்-லெஸ் டிசைன், டால்பி ஆடியோ, விவிட் பிக்சர் வீடியோ, டிடிஎஸ் மட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் மாடல்களை போல வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட 32 இன்ச் டிவி தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 மாடாலானது, நல்ல ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








