ஆர்டர் அறக்க பறக்குது.. ரூ.10000 போதும்.. பெஸ்ட் 32 இன்ச் டிவி.. டாப் 4 பிராண்ட்.. அமேசான் ஆஃபர்!
அமேசான் (Amazon) தளத்தில் பட்டையை கிளப்பும் ஆஃபருடன் வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கும் 32 இன்ச் டிவிகளின் டாப் 4 லிஸ்டை இங்கே கொடுத்துள்ளோம். இதில், ரெட்மி, எம்ஐ, ஏசர், டிசிஎஸ் டிவிகளின் மாடல்கள் இருக்கின்றன. இதுகுறித்த விவரம் இதோ.
ரெட்மி 32 இன்ச் ஃஎப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Redmi 32 inches F Series HD Ready Smart LED Fire TV): இந்த டிவி L32R8-FVIN மாடலாகும். பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்இடி டிஸ்பிளே கொண்டிக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

ஃபயர் ஓஎஸ் 7 (Fire OS 7) மற்றும் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 20W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. இந்த டிவியின் விலை ரூ.9,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அமேசானில் எஸ்பிஐ டெபிட் கார்டுக்கு ரூ.750 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,249க்கு வாங்கிக்கொள்ளலாம்.
எம்ஐ 32 இன்ச் ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MI 32 inches A Series HD Ready Smart Google TV): இந்த டிவி L32M8-5AIN மாடலாகும். பிளாக் கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த டிவி எல்இடி டிஸ்பிளே கொண்டிக்கிறது. அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 20W ஸ்பீக்கர்கள் வருகின்றன. கூகுள் டிவி (Google TV) ஓஎஸ் மற்றும் மாலி ஜி31 எம்பி 2 கிராபிக்ஸ் கொண்டுள்ளது. இந்த டிவியின் விலை ரூ.10,990ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அமேசானில் எஸ்பிஐ டெபிட் கார்டுக்கு ரூ.750 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.10,240க்கு வாங்கிக்கொள்ளலாம்.
ஏசர் 32 இன்ச் அட்வாஸ்ட் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி Acer 32 inches Advanced I Series HD Ready Smart LED Google TV): இதுவொரு AR32GR2841HDFL மாடல் பிளாக் கலர் டிவியாகும். கூகுள் டிவி ஓஎஸ் வருகிறது. 1.5 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி கொண்டுள்ளது.
60Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மற்றும் 30W ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதேபோல மாலி ஜி31 எம்பி 2 கிராபிக்ஸ் வருகிறது. இந்த டிவியின் விலை ரூ.11,499ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அமேசான் ரூ.750 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.10,749க்கு இந்த டிவியை பெற்றுக்கொள்ள முடியும்.
டிசிஎல் 32 இன்ச் பெசல்லெஸ் எஸ் சீரிஸ் ஃபுஎல்எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (TCL 32 inches Bezel-Less S Series FHD Smart Android LED TV): இந்த டிவி 32S5403AF மாடலாகும். பிளாக் கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 24W ஸ்பீக்கர் வருகிறது.
ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) கொண்டுள்ளது. 1080p ரெசொலூஷன் வருகிறது. இந்த டிவியின் விலை ரூ.10,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசானில் எஸ்பிஐ பேங்க் டெபிட் கார்டுக்கு ரூ.750 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.10,240க்கு இந்த டிவியை வாங்கிக்கொள்ளலாம்.
மேற்கூறிய டிவிகளில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். ப்ளூடூத், வை-பை மற்றும் எச்டிஎம்ஐ கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல டால்பி ஆடியோ சப்போர்ட் வருகின்றன. இந்த அம்சங்களை வைத்து, உங்களுக்கு ஏற்ற டிவியை தேர்வு செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








