Home
Gadgets

32-இன்ச் QLED டிஸ்பிளே கொண்ட புதிய Infinix டிவி.! கம்மி விலை.! நம்பி வாங்கலாமா? இதோ ரிவ்யூ.!

இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் 32இன்ச இன்பினிக்ஸ் W1 எச்டி ரெடி கியூஎல்இடி டிவி ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

குறிப்பாக குறிப்பாக இந்த ஸ்மார்ட் பல்வேறு புதிய அம்சங்களுடன் கம்மி விலையில் வெளியானது. குறிப்பாக இந்த டிவி புதிய ஸ்மார்ட் டிவி புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா.. அல்லது அப்படியே ஓரங்கட்டி விடலாமா? இதோ எங்களுடைய குவிக் ரிவ்யூ (Quick Review).

32-இன்ச் QLED டிஸ்பிளே கொண்ட புதிய இன்பினிக்ஸ் டிவி.! கம்மி விலை.!

32இன்ச் இன்பினிக்ஸ் W1 எச்டி ரெடி கியூஎல்இடி டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், 90% என்டிஎஸ்சி வைடு கலர் காமட் (NTSC Wide Colour Gamut), கேம் டாஸ்போர்ட் ஆப்டிமைசேஷன் (Game Dashboard Optimization) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி கியூஎல்இடி தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

குறிப்பாக இந்த டிவியின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். இந்த டிவியின் டிஸ்பிளே போன்றே மென்பொருள் வசதியும் மிகவும் அருமையாக உள்ளது. அதாவது குவாட்-கோர் பிராசஸர் உடன் ஐஎம்சி பிஎக்ஸ்4 ஜிபியு ( IMG BXE4 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.

குவாட்-கோர் பிராசஸர் என்பதால் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் எல்ஜி ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்தப்படும் வெப்ஓஸ்(webOS) தான் இந்த 32இன்ச் இன்பினிக்ஸ் W1 எச்டி ரெடி கியூஎல்இடி டிவியிலும் உள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக உள்ளது.

நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) உள்ளிட்ட ஓடிடி (OTT) ஆப்ஸ்கள் இதில் உள்ளன. இதுதவிர யூடியூப் (YouTube), ஆப்பிள் ஏர் பிளே (Apple AirPlay) மற்றும் ஆப்பிள் ஹோம் (Apple Home) உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இந்த டிவி.

அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 32இன்ச் இன்பினிக்ஸ் W1 எச்டி ரெடி கியூஎல்இடி டிவி (32-inch Infinix W1 QLED TV) மாடல். குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட மேஜிக் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

டூயல் பேண்ட் வைபை, 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 1 ஆர்எஃப் இன்புட் (RF Input), 1 ஏவி இன்புட் (AV Input) மற்றும் 1 ஹெட்போன்ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

32-இன்ச் QLED டிஸ்பிளே கொண்ட புதிய இன்பினிக்ஸ் டிவி.! கம்மி விலை.!

நம்பி வாங்கலாமா? குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஓடிடி ஆப்ஸ்களும் உள்ளன. அதேபோல் இதில் கியூஎல்இடி டிஸ்பிளே இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் சிறந்த ஆடியோ, தரமான பிராசஸர் மற்றும் அனைத்து கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த 32-இன்ச். பின்பு இந்த 32இன்ச் இன்பினிக்ஸ் W1 எச்டி ரெடி கியூஎல்இடி டிவியின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

எனவே கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதால் 32இன்ச் இன்பினிக்ஸ் W1 எச்டி ரெடி கியூஎல்இடி டிவியை நம்பி வாங்கலாம். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
32-inch Infinix W1 QLED TV Quick Review : An entry-level smart TV for the masses : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X