சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 16ஜிபி மெமரி.. 40W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
தாம்சன் நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டிவி 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி விஷன், மீடியாடெக் பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Thomson Phoenix QLED Ultra HD (4K) Smart Google TV) மாடலுக்கு பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20499 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தாம்சன் டிவியின் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தாம்சன் Phoenix 43-இன்ச் டிவி அம்சங்கள் (Thomson Phoenix 4K Smart TV Specifications): 3840 × 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன், உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி 4கே டிவி மாடல். குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மீடியாடடெக் எம்டி9602 (MT9602) பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த அசத்தலான தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு இந்த தாம்சன் Phoenix 43-இன்ச் டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். மேலும் கூகுள் டிவி இயங்குதளம் மூலம் இந்த தாம்சன் டிவி வெளிவந்துள்ளது. எனவே பல்வேறு புதிய அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கும்.
கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது அசத்தலான தாம்சன் Phoenix 43-இன்ச் டிவி. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியின் ஆடியோ அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். டால்பி அட்மாஸ்(Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) ஆதரவு கொண்ட 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.
இந்த தாம்சன் டிவியில் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








