Home
Gadgets

ஹாலுக்கே 2 டிவி ஆர்டர்.. ரூ.20749 போதும்.. 43 இன்ச் டிவி.. 4K கியூஎல்இடி டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, ஸ்மார்ட் வாய்ஸ் கன்ட்ரோல் போன்ற பக்கா பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பெசல்-லெஸ் டிசைன் கொண்ட 43 இன்ச் தாம்சன் பீனிக்ஸ் கியூஎல்இடி டிவியானது, வாங்க தூண்டும்படியான தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.

தாம்சன் பீனிக்ஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Thomson Phoenix QLED TV Specifications): இந்த டிவியில் 43 இன்ச் (3840 × 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே வருகிறது. 4K ரெசொலூஷன், 550 நிட்ஸ் பிரைட்னஸ், 1.1 பில்லியன் கலர், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஹாலுக்கே 2 டிவி ஆர்டர்.. ரூ.20749 போதும்.. 43 இன்ச் டிவி.. QLED பேனல்!

டால்பி விஷன் (Dolby Vision), 60Hz ரெஃப்ரெஷ் ரேட், டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter) சப்போர்ட் வருகிறது. அதேபோல ஸ்போர்ட்ஸ், கேம், விவிட் மற்றும் மூவி போன்ற மல்டிபிள் வீடியோ மோட்கள் (Mutiple Video Mode) வருகின்றன. ஆகவே, வீடியோ அனுபவம் அல்ட்ரா எச்டி (Ultra HD) தரத்தில் இருக்கும்.

வீடியோவை போலவே ஆடியோ பீச்சர்களும் பிரீமியமாகவே இருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) சப்போர்ட் கொண்ட 40W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speaker) வருகின்றன. அதேபோல டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் வருகிறது. ஸ்டான்டர்ட், மியூசிக், மூவி, ஸ்போர்ட் போன்ற சவுண்ட் மோட்கள் இருக்கின்றன.

இந்த 43 இன்ச் தாம்சன் டிவியில் மீடியாடெக்கின் எம்சி9602 (MT9602) சிப்செட் மற்றும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்டிருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, இன்-பில்ட் ஸ்கிரீன் மிரரிங் (In-Buit Screen Mirroring) பீச்சர் வருகிறது.

ஹாலுக்கே 2 டிவி ஆர்டர்.. ரூ.20749 போதும்.. 43 இன்ச் டிவி.. QLED பேனல்!

அதேபோல கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கொண்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி, எம்எக்ஸ் பிளேயர் போன்ற ஓடிடி ஆப் முதல் கேமிங் ஆப்கள் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

கூகுள் டியோ (Google Duo), கூகுள் போட்டோ (Google Photo) சப்போர்ட் உள்ளது. லேப்டாப், மொபைல், பிசி காஸ்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மற்றும் பிளாக்பெர்ரி போன்ற மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Mobile Operating System) கனெக்டிவிட்டியும் கொண்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 13 சிஸ்டம் மொழிகள் (System Languages) சப்போர்ட் உள்ளது. ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. அதேபோல 3 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட் மற்றும் 2 யுஎஸ்பி (USB) போர்ட் கனெக்டிவிட்டி வருகிறது.

இன்டர்நெட் அக்சஸ் (Internet Access) கொண்ட ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கொண்டிருக்கிறது. ஓகே கூகுள் சப்போர்ட் உள்ளது. 6.5 கிலோ எடை கொண்டிருக்கிறது. மெட்டாலிக் அலாய் ஸ்டான்ட், ஸ்லீக் டிசைன் மற்றும் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. ஆகவே, ஹாண்டில் செய்வது எளிதாக இருக்கும்.

1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இவ்வளவு பீச்சர்களை கொண்ட இந்த டிவியின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.1,250 தள்ளுபடி உடன் வெறும் ரூ.20,749 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
31 Percent Discount on 43 inch Thomson Phoenix QLED TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X