Home
Gadgets

ஆர்டர் அதிரும்.. 24W ஸ்பீக்கர்கள்.. பெசல்-லெஸ் டிசைன்.. ஆஃபரில் Vu ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இயர் எண்ட் சேல் (Year End Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் Vu நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2022 மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20,990 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.

ஆர்டர் அதிரும்.. 24W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் Vu  ஸ்மார்ட் டிவி..

எனவே இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த 43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2022 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் Vu பிரீமியம் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2022 அம்சங்கள்: இந்த டிவி 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

டூயல் கோர் (Dual Core) கிராஃபிக் பிராசஸர் மற்றும் குவாட்-கோர் (Quad Core)பிராசஸர் வசதியுடன் இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்.

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த டிவியின் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Vu நிறுவனம்.

நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட் ((Google Assistant), குரோம்காஸ்ட் (Chromecast) ஆதரவைக் கொண்டு இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

ஆர்டர் அதிரும்.. 24W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் Vu  ஸ்மார்ட் டிவி..

அதேபோல் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவி பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஐபிஎஸ் பேனல் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 43-இன்ச் இந்த பிரீமியம் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2022 மாடல் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் Vu நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
30 percent discount on Vu Premium TV on Flipkart: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X