அதிர விடும் அமேசான்.. 24W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. 8GB ஸ்டோரேஜ்.. ஆஃபரில் சியோமி டிவி.. எந்த மாடல்?
சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக சியோமி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக சியோமி அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடல்களுக்கு அமேசான் தளத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.

எனவே சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது மிகவும் கம்மி விலையில் வாங்க கிடைக்கும். மேலும் இந்த டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Xiaomi MI 5A Series Smart TV specifications): ஃபுல் எச்டி (Full HD) டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான எம்ஐ 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
கார்டெக்ஸ் ஏ55 64-பிட் குவாட் கோர் பிராசஸர் (Cortex A55 64-bit Quad Core) வசதி கொண்டுள்ளது இந்த சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 (Android 11) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது Vivid பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ப்ரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் (Chromecast) ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் இந்த டிவியில் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவுடன் 24W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 40-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் உடன் வெளிவந்துள்ளது. அதாவது Quick Mute, Quick wake மற்றும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற கீ-களை கொண்டுள்ளது இந்த ரிமோட். இதுதவிர புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி.


Click it and Unblock the Notifications








