Home
Gadgets

ஓஹோ OnePlus.. ஒரே நாளில் 3 அறிமுகம்.. 7400mAh போன், 10050mAh டேப்லெட், 10 நாள் பேட்டரி லைஃப் வாட்ச்!

ஒன்பிளஸ் நிறுவனமானது, இந்த 2025 ஆம் ஆண்டை - அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன - ஒன்பிளஸ் 15 மாடலின் அறிமுகத்தோடு முடித்துக்கொள்ள போவது இல்லை. ஒன்பிளஸ் நிறுவனமானது இன்னும் சில தினங்களில் ஒரே நாளில் 3 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது.

அந்த நாள் - 2025 டிசம்பர் 17 ஆம் தேதி ஆகும். அந்நாளில் ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R), பட்ஜெட் விலை டேப்லெட் மாடல் ஆன ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) மற்றும் புதிய ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) மாடலை உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யவுள்ளது.

7400mAh போன், 10050mAh டேப்லெட், 10 நாள் பேட்டரி லைஃப் வாட்ச்!

ஒன்பிளஸ் வாட்ச் லைட் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளே
- அக்வா டச் அம்சம் (ஈரமான கைகளால் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்த அனுமதிக்கும்)
- சர்குலர் டயல்
- மெட்டல் ஃபிரேம்
- வலது பக்கத்தில் ஒரு க்ரவுண்
- குறிப்பிடப்படாத செவ்வக வடிவிலான ஒரு பட்டன்
- ரப்பர் ஸ்ட்ராப்
- பிளாக் மற்றும் சிலர் கலர்கள்

- 10 நாட்கள் வரை பேட்டரி லைஃப்
- NFC ஆதரவு
- Android மற்றும் iOS-க்கான இணக்கத்தன்மை
- மேம்படுத்தப்பட்ட டூயல் பிரெக்வன்சி ஜிபிஎஸ்
- 60ஸ் வெல்னஸ் ஓவர்வியூ
- ஸ்லீப் மானிட்டர்
- இதய துடிப்பு மானிட்டர்
- ஓடோமீட்டர்
- ஒர்க்அவுட் டிராக்கர்
- கலோரி கவுண்டர்

ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 12.1-இன்ச் டிஸ்பிளே
- 2800 x 1980 ரெசல்யூஷன்
- 88.5 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ
- 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300-அல்ட்ரா

- ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 16
- 8ஜிபி ரேம்
- நான்கு ஆண்டுகள் வரை நிலையான செயல்திறனை பராமரிக்க TUV SUD சான்றிதழ்
- 10,050mAh பேட்டரி
- 33W SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவு
- ரீடெயில் பாக்ஸில் 45W சார்ஜர்
- இது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 7400mAh பேட்டரியுடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனுடன், இந்த ஸ்மார்ட்போன் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை (1.5K AMOLED Display) கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இது ஒரு சிறந்த மிட்-ரேன்ஜ் போனாக நிலைநிறுத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பில் - ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய 7400mAh பேட்டரி ஆனது 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்கால் ஆதரிக்கப்படும் என்றும், 4 ஆண்டுகளுக்குப் பிறகும் இது குறைந்தது 80% க்கும் அதிகமான திறனை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் ஒன்பிளஸ் பிராண்ட் தெரிவித்துள்ளது.

மேலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனால் 4கே ரெசல்யூஷனில் வினாடிக்கு 120 பிரேம்களில் ரெக்கார்ட் செய்ய முடியும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது உண்மையாகும் பட்சத்தில் இந்த சிப்செட்டை கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும். சுவாரசியமாக ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது பிளஸ் மைண்டிற்கான (Plus Mind) ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 New OnePlus Devices Launching On December 17 OnePlus Watch Lite OnePlus 15R OnePlus Pad Go 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X