வீட்டுக்கு 2 வாங்கலாம்! ரூ.5,000, ரூ.8,000-க்கு.. 3 ஸ்மார்ட் TVகள் அறிமுகம்! 43-இன்ச் மாடல் ஆர்டர் தெறிக்குது!
கோடாக் (Kodak) நிறுவனமானது.. ரூ.5,000 முதல் ரூ.8,000-க்குள் என்கிற "நம்ப முடியாத" பட்ஜெட்டில் 3 புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதென்ன மாடல்கள்? அவைகளின் ஸ்க்ரீன் சைஸ் என்ன? விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
கோடாக் நிறுவனம் எஸ்இ (SE) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அதன் ஸ்பெஷல் எடிஷன் (Special Edition) சீரீஸின் கீழ் 3 புதிய எச்டி எல்இடி டிவி (HD LED TV) மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. புதியதாக அறிமுகமாகி உள்ள 3 மாடல்களும் 24-இன்ச், 32-இன்ச் மற்றும் 43-இன்ச் என்கிற வெவ்வேறு அளவிலான ஸ்க்ரீன் சைஸ்களில் வெளியாகியுள்ளன.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இந்த மூன்று கோடாக் எஸ்இ சீரீஸ் ஸ்மார்ட் டிவிகளுமே ஏ35எக்ஸ்4 ப்ராசஸர் (A35X4 Processor) கொண்டு இயங்கும். ஸ்பீக்கரை பொறுத்தவரை 24-இன்ச் மாடலில் 20W ஸ்பீக்கர் யூனிட் உள்ளது; 32-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்களில் 30W ஸ்பீக்கர் உள்ளது
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை மூன்று கோடாக் ஸ்மார்ட் டிவிகளுமே மிராகாஸ்ட் (Miracast), வைஃபை (Wi-Fi), எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யூஎஸ்பி (USB) போன்றவைகளை கொண்டுள்ளன. மூன்று கோடாக் ஸ்மார்ட் டிவிகளுமே 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளன.

இது தவிர்த்து மூன்று கோடாக் டிவி மடல்களுமே யூட்யூப் (YouTube), ப்ரைம் வீடியோ (Prime Video), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (Zee5) மற்றும் பல ப்ரீ-இன்ஸ்டால்டு ஆப்களுடன் வருகின்றன. 32-இன்ச் மற்றும் 43-இன்ச் வேரியன்ட்கள் பெசல்லெஸ் டிஸைன் உடன் வருகின்றன. அதேசமயம் 24-இன்ச் வேரியண்ட் ஆனது ஸ்லிம் பெஸலுடன் வருகிறது.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 24-இன்ச் கோடாக் எஸ்இ சீரீஸ் ஸ்மார்ட் டிவியானது ரூ.5999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே சீரிஸின் 32-இன்ச் மாடலானது ரூ.8,499 க்கும், 43-இன்ச் மாடல் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 புதிய கோடாக் ஸ்மார்ட் டிவிகளுமே பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களின் அறிமுகம் ஒருபக்கம் இருக்க, பிளிப்கார்ட் பிக் அப்கிரேட் டேஸ் (Flipkart Big Upgrade Days) விற்பனையின் கீழ் பல வகையான கோடாக் ஸ்மார்ட் டிவிகள் மீது தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? இதோ லிஸ்ட்:
கோடாக் 24HDX100s மாடல் ரூ.6,499 க்கு பதிலாக ரூ.5,555 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல கோடாக் 24SE5002 மாடல் ரூ.6,999 க்கு பதிலாக ரூ.5,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோடாக் 329X5051 மாடல் ரூ.10,499 க்கு பதிலாக ரூ.9,899 க்கு வாங்க கிடைக்கிறது.
கோடாக் 32HDX7XPRO மாடல் ரூ.9,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல கோடாக் 32HDX900S மாடல் ரூ.8,499 க்கு பதிலாக ரூ.7,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோடாக் 32SE5001BL மாடல் ரூ.8,999 க்கு பதிலாக ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது.
கோடாக் 409X5061 மாடல் ரூ.15,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல கோடாக் 40SE5003BL மாடல் ரூ.14,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோடாக் 439X5081 மாடல் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
கோடாக் 43MT5055 மாடல் ரூ.22,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல கோடாக் 43UHDX7XPROBL மாடல் ரூ.20,499 க்கு பதிலாக ரூ.19,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோடாக் 50CAPROGT5012 மாடல் ரூ.25,999 க்கு பதிலாக ரூ.25,499 க்கு வாங்க கிடைக்கிறது.
கோடாக் 50MT5011 மாடல் ரூ.29,999 க்கு பதிலாக ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல கோடாக் 55CAPROGT5014 மாடல் ரூ.29,999 க்கு பதிலாக ரூ.29,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோடாக் 55MT5022 மாடல் ரூ.32,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது.
கோடாக் 55UHDX7XPROBL மாடல் ரூ.28,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல கோடாக் 65MT5033 மாடல் ரூ.49,999 க்கு பதிலாக ரூ.46,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோடாக் 75MT5044 மாடல் ரூ.1,04,999 க்கு பதிலாக ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








