43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்க ஐடியா இருக்கா? அப்போ இந்த புதிய ஆபரை கட்டாயம் பாருங்க..
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது flipkart electronics day sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் மே 31ம் தேதி வரை நடைபெறும். குறிப்பாக பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் Vu நிறுவனத்தின் 43-இன்ச் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் Vu அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (43CA) மாடலுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.21,999-விலையில் வாங்க முடியும்.

இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த 43-இன்ச் Vu அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இப்போது 43-இன்ச் ஏர அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
43-இன்ச் Vu அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 3840 x 2160 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4கே டிஸ்பிளே என்பதால் இந்த டிவி ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஐபிஎஸ் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இது ஆக்டிவாய்ஸ் ரிமோட்டைக் கொண்டுள்ளது. அதாவது இதில் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் செயல்படும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையைப் பயன்படுத்தலாம்.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். பின்பு இந்த டிவியின் ரிமோட்டில் ஓடிடி ஆப்ஸ்களுக்கான ஹாட்ஸ்கிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் டிஸ்பிளே மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Vu நிறுவனம்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இந்த 43-இன்ச் Vu அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 50 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கேமிங் வசதிக்குத் தகுந்தபடி பல சிறப்பு அம்சங்கள் 43-இன்ச் Vu அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. பின்பு புளூடூத், வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த அசத்தலான 43-இன்ச் Vu அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








