Home
Gadgets

இனிமே யாரு விடுவா? 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. OnePlus டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

பண்டிகை காலம் என்பதால் அமேசான், பிளிப்கார்ட் தொடர்ந்து புதிய புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அமேசான் தளத்தில் முன்னணி நிறுவனங்களின் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரபலமான 43-இன்ச் ஒன்பிளஸ் Y1S ஸ்மார்ட் டிவிக்கும் தற்போது அமேசான் தளத்தில் 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.31,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் Y1S ஸ்மார்ட் டிவி ஆனது தற்போது ரூ.22,999-க்கு வாங்க கிடைக்கிறது.

8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. OnePlus டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் Y1S ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த ஒன்பிளஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். அதேபோல் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, காமா பிக்சர் எஞ்சின்(Gamma Picture Engine) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

43-இன்ச் OnePlus Y1S ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை தரும் என்றே கூறலாம். மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

அதாவது இந்த ரிமோட்டில் கூகுள் அசிஸ்டண்ட், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்றவற்றிக்கு தனியாக பட்டன்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.OxygenPlay ஒஎஸ் வசதியும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டிவி.

43-இன்ச் OnePlus Y1S ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. குறிப்பாக இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியும். மேலும் 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. OnePlus டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக டிசிஎல், சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை வாங்குவது மிகவும் நல்லது.

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 5400எம்ஏஎச் பேட்டரி, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு, 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 12 போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
28 percent off 43-inch OnePlus Smart TV on Amazon: Check new price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X