Home
Gadgets

பிளிப்கார்ட் மிரளுது.. வெறும் ரூ.12,879 பட்ஜெட்ல 9340mAh பேட்டரி டேப்லெட்.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ பேட் எஸ்இ (OPPO Pad SE) டேப்லெட்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 9340mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 11 இன்ச் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் சிப்செட் கொண்ட இந்த ஓப்போ பேட் எஸ்இ டேப்லெட்டின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வை-பை (Wi-Fi) வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட எல்டிஇ வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட எல்டிஇ (LTE) வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது.

பிளிப்கார்ட் மிரளுது.. வெறும் ரூ.12,879 பட்ஜெட்ல 9340mAh பேட்டரி!

இப்போது, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுக்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,120 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.12,879 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதேபோல மற்ற மாடல்களுக்கும் டிஸ்கவுண்ட் வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுக்கு ரூ.1,270 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டுக்கு ரூ.1,360 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். ரூ.10,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஸ்டார்லைட் சில்வர் (Starlight Silver) மற்றும் டிவைலைட் ப்ளூ (Twilight Blue) கலர்களில் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் பிரீமியம் லுக் கொடுக்கிறது. அதேபோல ஐ-கேர் டிஸ்பிளே, லாங்-லாஸ்டிங் பேட்டரி மற்றும் 36 மாதங்களுக்கான ப்ளூயன்சி புரொடெக்சன் கொடுக்கிறது. குவாட் ஸ்பீக்கர்களை கொடுத்து இருக்கிறது. ஸ்லீக் மெட்டல் பாடி கிடைப்பதால், டியூரபிலிட்டி பக்காவாக எதிர்பார்க்கலாம். இப்போது, டிஸ்பிளே, பேட்டரி போன்ற பீச்சர்களை பார்க்கலாம்.

ஓப்போ பேட் எஸ்இ அம்சங்கள் (OPPO Pad SE Specifications): இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் (Octa Core MediaTek Helio G100 6nm) சிப்செட் மற்றும் அதற்கு மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

ஆகவே, லேட்டஸ்ட் யுஐ எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15.0.1 (ColorOS 15.0.1) கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் பவர் சேவிங் மோட் (Smart Power Saving Mode) கொண்ட 9340mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் 11 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப டிஸ்பிளே உள்ளது.

ஆகவே, ஐ-கேர் சப்போர்ட் கொண்ட 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் விவிட் விஷன் (Vivid Vision) கிடைக்கிறது. இதில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும். 207 பிபிஐ பிக்சல் டென்சிட்டியை இந்த டிஸ்பிளேவில் பெற்று கொள்ளலாம்.

இந்த டேப்லெட்டை சுற்றி 4 ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. இதில் ஓம்னிபியரிங் சவுண்ட் ஃபீல்டு மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ பேட் எஸ்இ டேப்லெட்டில் 5 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 4G எல்டிஇ கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 7.39 தடிமன் மற்றும் 527 கிராம் எடை வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
28 Percent Discount on OPPO Pad SE With 4GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X