பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் சியோமி டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் Big Bachat Dhamaal Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி
நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி இந்த சிறப்பு விற்பனையில் சியோமி 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது சியோமி 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 (Mi A series Full HD LED Smart Google TV 2023) மாடலுக்கு தான் பிளிப்கார்ட் தளத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே குறைவான விலையில் இந்த 40-இன்ச் டிவியை வாங்க முடியும்.

சியோமி 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 அம்சங்கள்: ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான40-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ்(Bezel-less) வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 40-இன்ச் மாடல். மேலும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 40-இன்ச் மாடல்.
குவாட்-கோர் ஏ35 சிப்(Quad Core A35) வசதி இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 40-இன்ச் மாடல் ஆனது கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.
அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 40-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி. கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, பிளே ஸ்டோர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
குறிப்பாக மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் (Graphic Processor) ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்ச்வால் + (PatchWall +) ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 40-இன்ச் மாடல்.

ஆட்டோ லோ லேட்டன்சி மோட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி. மேலும் டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல். எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
அதேபோல் புளூடூத் 5.0, வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி, 3.5எம்எம் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 40-இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் சியோமி நிறுவனம் இந்தியாவில் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








