Home
Gadgets

பிளிப்கார்ட் குளுகுளு ஆஃபர்.. பிராண்டட் ஏர் கூலர்.. 2 வருடம் வாரண்டி.. எந்த மாடல்? என்ன விலை?

இப்போது கூட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் வெயில் தொடர்ந்து நீடித்து வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதிலும் ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் ரெட் அலெர்ட் விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பம் அதிகரித்துள்ளது. எனவே வெயில் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் ஏர் கூலர்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் தரமான ஏர் கூலர் மாடல் ஒன்றுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் குளுகுளு ஆஃபர்.. பிராண்டட் ஏர் கூலர்.. எந்த மாடல்?

அதாவது வி-கார்டு 22 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (ARIDO P22H-N) மாடலுக்கு தற்போது 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5485 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது.

எனவே ரூ.4235 இருந்தால் போதும் வி-கார்டு 22 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் மாடலை வாங்கி விட முடியும். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்புடன் இந்த வி-கார்டு ஏர் கூலர் வெளிவந்துள்ளது. இப்போது வி-கார்டு 22 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் குளுகுளு ஆஃபர்.. பிராண்டட் ஏர் கூலர்.. எந்த மாடல்?

வி-கார்டு அரிடோ டி35 எச்-என் அம்சங்கள் (V Guard ARIDO P22H N specification): 22 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி (Tank Capacity) கொண்டுள்ளது இந்த வி-கார்டு ஏர் கூலர் மாடல். குறிப்பாக ஒயிட் மற்றும் பர்பிள் நிறங்களில் இந்த சாதனம் வாங்க கிடைக்கிறது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது வி-கார்டு நிறுவனம்.

மேலும் இந்த ஏர் கூலர் 1100 m3/h ஏர் டெலிவரி கொடுக்கும். பின்பு இது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் ஆகும். மேலும் குளிரூட்டும் பேட்கள் கூலரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அதாவது கூலர்களுக்கு பல்வேறு வகையான கூலிங் பேட்கள் வழங்கப்படுகின்றன. அதாவது கம்பளி மரம் (wool wood), ஆஸ்பென் பட்டைகள் (aspen pads) மற்றும் தேன்கூடு பட்டைகள் (honeycomb pads) ஆகியவை மிகவும் பொதுவானவை ஆகும். ஆனாலும் இதில் தேன்கூடு கூலிங் பேட்கள் மற்ற இரண்டையும் விடவும் சிறந்தது ஆகும். ஏனெனில் இது நீண்ட கால குளிரூட்டலை வழங்குகின்றன

அதன்படி இந்த வி-கார்டு அரிடோ டி35 எச்-என் ஏர் கூலர் ஆனது தேன்கூடு பட்டைகள் (honeycomb pads) உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம். அதேபோல் 4டி ஏர் சர்குலேஷன் (4D Air Circulation) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஏர் கூலர் மாடல்.

பிளிப்கார்ட் குளுகுளு ஆஃபர்.. பிராண்டட் ஏர் கூலர்.. எந்த மாடல்?

குறிப்பாக வி-கார்டு 22 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் ஆனது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் ஆகும். எனவே மின்வெட்டு ஏற்பட்டால் இன்வெர்ட்டர்களில் கூட இந்த ஏர்கூலர் இயங்கும். மேலும் இதில் ஒரு பிரத்யேக ஜஸ் சேம்பரை சேர்த்துள்ளனர். அதேபோல் இந்த வி-கார்டு ஏர் கூலர் மாடலுக்கு 2 வருட மோட்டார் மற்றும் பம்ப் வாரண்டி (motor and pump warranty) மற்றும் 1 வருட ப்ராடெக்ட் வாரண்டி (product warranty) கிடைக்கும்.

அதேபோல் வி-கார்டு நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஏர் கூலர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
21 Percent Discount on V Guard ARIDO P22H N Air Cooler in flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X