ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.21,999 போதும்.. 11 இன்ச் டிஸ்பிளே.. 7040mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் பிராண்ட்டில் டேப்லெட் வாங்க வேண்டுமானால், இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.3000 டிஸ்கவுண்ட்டில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் (Samsung Galaxy Tab A9 Plus) மாடலை விட்டுவிடாதீர்கள். இந்த பட்ஜெட்டில் 5ஜி கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், 11 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட், 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 7,040mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் பிரீமியம் டிசைனில் பின்னி எடுத்துள்ளது. இந்த டேப்லெட்டின் முழு பீச்சர்கள், டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இப்போது, வை-பை டேப்லெட்களைவிட சிம் கார்டு கனெக்டிவிட்டி கொண்ட டேப்லெட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால், சிம் கார்டு சப்போர்ட் கொடுக்கும் டேப்லெட்கள் விலை அதிகமாக இருக்கும். அதேபோல நல்ல பிராண்ட் டேப்லெட்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், சாம்சங் பிரியர்களுக்கு இப்போது பட்ஜெட்டில் ஒரு மாடல் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் டிஸ்கவுண்ட் மூலம் பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் மாடலே இப்போது டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டின் வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடலின் விலை ரூ.22,999ஆக இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் இப்போது ரூ.21,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
இதுமட்டுமல்ல, எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.18,999 பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் டேப்லெட்டை வாங்கி கொள்ளலாம். 5ஜி கனெக்டிவிட்டிக்கே இந்த பட்ஜெட் பக்காவாக இருக்கிறது. ஆனால், மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. அவற்றை இப்போது பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab A9 Plus Specifications): இந்த பட்ஜெட்டிலும் ஓடிடி பிரியர்கள் விரும்படி 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிது. இதுவொரு டிஎப்சி (TFT) டெக்னாலஜி கொண்ட டிஸ்பிளே மாடலாகும்.
ஒரு வருடம் பழைய மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே எதிர்பார்க்க முடியும். அதேபோல சாம்சங் நிறுவனத்தில் ஒன்யுஐ 5.1.1 (OneUI 5.1.1) சப்போர்ட் கிடைக்கிறது. இருப்பினும், பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 8என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 (8nm Octa Core Snapdragon 695) சிப்செட் வருகிறது.
மீடியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் டேப்லெட்டில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வருகிறது. இதற்கு மேல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், எக்ஸ்டர்னல் சப்போர்ட் கொடுக்கும்படி மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் (Dual SIM) சப்போர்ட் கிடைக்கிறது. ஒரு நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) மற்றும் ஒரு ஈசிம் (eSIM) பயன்படுத்தி கொள்ளலாம். டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் கொண்ட 7,040mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் டேப்லெட்டில் 5ஜி கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 எல்இ (Bluetooth 5.3 LE) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டார்க் ப்ளூ (Dark Blue), கிரே (Grey) மற்றும் சில்வர் (Silver) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








