Home
Gadgets

1 இல்ல.. 2 இல்ல.. இரவோடு இரவாக.. 7 புதிய தயாரிப்புகளை களமிறக்கும் டிம் குக்.. Apple அதிரடி!

இன்று (மே 7) இரவு நடக்கும் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லெட் லூஸ் 2024 நிகழ்வின் போது 4 புதிய ஐபாட் மாடல்கள், மேஜிக் கீபோர்ட், ஆப்பிள் பென்சில் என பல வகையான புதிய ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

2024 ஆம் ஆண்டின் நடக்கும் ஆப்பிளின் இந்த முதல் நிகழ்வானது எப்போது தொடங்கும்? ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வை (Apple Let Loose Event) லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? இதன்கீழ் என்னென்ன புதிய தயாரிப்புகள் அறிமுகமாகும்? அவைகள் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

7 புதிய தயாரிப்புகளை களமிறக்கும் டிம் குக்.. Apple அதிரடி!

லைவ் ஆக பார்ப்பது எப்படி? ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வானது இந்திய நேரப்படி இன்று (மே 7) இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடீயூப் சேனல் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் ஆப்பிளின் இணையதளம் மற்றும் ஆப்பிள் டிவி ஆப்ஸ் மூலமாகவும் இதை ஆன்லைன் வழியாக பார்க்கலாம்.

என்னென்ன அறிமுகமாகும்? முன்னரே குறிப்பிட்டபடி, லெட் லூஸ் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது வரையிலாக.. ஏர் சீரீஸின் கீழ் 2 புதிய ஐபாட்கள், ப்ரோ சீரிஸின் கீழ் 2 புதிய ஐபாட்கள், ஒரு புதிய ஆப்பிள் பென்சில் மற்றும் ஒரு புதிய மேஜிக் கீபோர்ட் ஆகியவைகள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து வேறு ஏதாவது புதிய அறிவிப்பும் நடக்கலாம்.

ப்ரோ சீரீஸின் கீழ் என்னென்ன ஐபாட் மாடல்கள் அறிமுகமாகும்? இந்த சீரிஸின் கீழ் 12.9 இன்ச் ஆப்பிள் ஐபாட் ப்ரோ (Apple iPad Pro 12.9) மற்றும் 11-இன்ச் ஆப்பிள் ஐபாட் ப்ரோ (Apple iPad Pro 11) மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

இவ்விரு புதிய ஐபாட் ப்ரோ மாடல்களுமே பல சிறிய மற்றும் பெரிய மாற்றங்களை கொண்டுவர உள்ளது. முதலாவதாக, இந்த ஆப்பிள் ஐபாட் ப்ரோ மாடல்கள் ஆனது முதன்முறையாக 12.9 மாடலில் மினி-எல்இடி மற்றும் 11-இன்ச் எல்சிடி பேனலை தவிர்த்து ஓஎல்இடி டிஸ்பிளேக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓஎல்இடி பேனல்கள் மூலம், ஐபாட் டிஸ்பிளேவின் தரம் உயரும்.

மேலும் ஒப்பீட்டளவில் இந்த இரண்டு மாடல்களும் கிட்டத்தட்ட 20% மெலிதாக இருக்கும். மேலும் ஐபாட்கள் ஒட்டுமொத்தமாக 15% சிறியதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு புதிய ஐபாட் ப்ரோ மாடல்களிலும் ஆப்பிளின் புதிய எம்4 சிப் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாம் பார்க்கக்கூடிய மற்றொரு பெரிய மாற்றம் - செல்பீ கேமராவில் இடம்பெறவுள்ள லேண்ட்ஸ்கேப் மோட் ஆக இருக்கும்!

ஏர் சீரீஸின் கீழ் என்னென்ன ஐபாட் மாடல்கள் அறிமுகமாகும்? இந்த சீரிஸின் கீழ் 12.9 இன்ச் ஆப்பிள் ஐபாட் ப்ரோ (Apple iPad Air 12.9) மற்றும் 10.9-இன்ச் ஆப்பிள் ஐபாட் ப்ரோ (Apple iPad Air 10.9) மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்

ஆப்பிளிள் ஐபாட் ப்ரோ மாடலை போலவே, 12.9 இன்ச் டிஸ்பிளே கொண்ட பெரிய ஐபேட் ஏர் மாடலும் இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த அறிமுகத்துடன், ஐபாட் ஏர் மாடலை வாங்குபவர்கள் தேர்வு செய்ய இரண்டு விருப்பங்கள் இருக்கும். அம்சங்களை பொறுத்தவரை 12.9-இன்ச் ஐபாட் ஏர் ஆனது மினி-எல்இடி பேனலை கொண்டிருக்கலாம் அல்லது எல்சிடி டிஸ்பிளே பயன்படுத்தப்படலாம். இவ்விரு ஐபாட் ஏர் மாடல்களுமே எம் சிப் மூலம் இயக்கப்படலாம்.

ஆப்பிளின் புதிய மேஜிக் கீபோர்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? ஒருவழியாக ஆப்பிள் அதன் மேஜிக் கீபோர்ட்டை அப்கிரேட் செய்கிறது. இப்போது வாங்க கிடைக்கும் மாடல் மோசமாக இல்லை. இருப்பினும், வரவிருக்கும் மாடல் அலுமினிய பேஸ் மற்றும் பெரிய டிராக்பேட் போன்ற சில வடிவமைப்பு மாற்றங்களை கொண்டுவரலாம்.

ஆப்பிளின் புதிய பென்சிலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? இன்று நடக்கும் லெட் லூஸ் நிகழ்வில் ஆப்பிள் பென்சில் 3 (Apple Pencil 3) அல்லது ஆப்பிள் பென்சில் ப்ரோ (Apple Pencil Pro) அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இரண்டில் ஒன்று அறிமுகம் செய்யப்படுமா அல்லது இரண்டுமே அறிமுகம் செய்யப்படுமா என்பதில் தெளிவு இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 Apple Let Loose Event May 7 New iPad Magic Keyboard Pencil Launching How to Watch Live Stream
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X