இனி 150-இன்ச் டிவி எதுக்கு? 12,999 பட்ஜெட்ல 200 இன்ச்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ZEBRONICS 200 இன்ச் ஸ்க்ரீன் ப்ரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் அந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் 4கே சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 (Zebronics PixaPlay 18) ப்ரொஜெக்டர் மாடலுக்கு 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.4000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 அம்சங்கள் (Zebronics PixaPlay 18 Specifications): இதுவொரு கிளியர் அவுட்புட் கொடுக்கும் எல்இடி (LED) ப்ரொஜெக்டர் ஆகும். அதுவும் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 மாடல். குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ப்ரொஜெக்டர் மாடலில் 7000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது தரமான பிக்சர் குவாலிட்டி வழங்கும். அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும்.
அதற்கு தகுந்தபடி, இதில் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இந்த 100-இன்ச், 150-இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கிறது.
குவாட் கோர் பிராஸசர் (Quad core processor) உடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு (Smart Android) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ப்ரொஜெக்டர். எனவே இந்த சாதனத்தில் அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும்.
மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் மற்றும் iOS ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 மாடல். பின்பு இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

அதேபோல் எலக்ட்ரானிக் போகஸ் (Electronic Focus) மற்றும் ஸ்மார்ட் வெர்டிகல் கரெக்சன் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 மாடல். எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் வி5.1, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் இதில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








