Home
Gadgets

பெரிய சைஸ் TV-கள் மீது வாய்பிளக்க வைக்கும் ஆபர்களை அறிவித்துள்ள Samsung! கூடவே FREE சவுண்ட் பார் வேற!

சாம்சங் (Samsung) நிறுவனமானது 'பிக் டிவி டேஸ்' (Big TV Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, இது முழுக்க முழுக்க ஸ்மார்ட் டிவிகள் (Smart TVs) மீது மட்டுமே ஆபர்களை வழங்கும் ஒரு சிறப்பு விற்பனை ஆகும்

சாம்சங் நிறுவனத்தின் பிக் டிவி டேஸ் விற்பனையின் கீழ் எந்தெந்த டிவி மாடல்களின் மீது என்னென்ன சலுகைகள் (Offer) அணுக கிடைக்கிறது? இந்த விற்பனை எத்தனை நாட்கள் நீடிக்கும்? என்கிற விவரங்கள் இதோ:

இந்த சிறப்பு விற்பனை எப்போது முடியும்?

இந்த சிறப்பு விற்பனை எப்போது முடியும்?

ஏற்கனவே தொடங்கிவிட்ட சாம்சங் பிக் டிவி டேஸ் விற்பனையானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று சாம்சங் அறிவித்துள்ளது. ஆக மாத கடைசியில் எப்படி ஒரு புதுப்பொருள் வாங்க முடியும் என்கிற கவலையே உங்களுக்கு வேண்டாம்.

இந்த சலுகையை பொறுத்தவரை, உங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. தள்ளுபடி விலையின் கீழ் உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை கொண்டு வர - போதுமான நாட்கள் கைவசம் உள்ளது!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில டிவி மாடல்களுடன் இலவச சவுண்ட்பார்!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில டிவி மாடல்களுடன் இலவச சவுண்ட்பார்!

இந்த சிறப்பு விற்பனையின் கீழ் எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்கும் முன்னர், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில டிவி மாடல்களை வாங்கும்போது உங்களுக்கு சாம்சங் Galaxy Z Fold4, சாம்சங் Galaxy A23 அல்லது சாம்சங் லைஃப்ஸ்டைல் சவுண்ட்பார் போன்றவைகள் இலவசமாக கிடைக்கும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

இந்த சலுகைகள் ஆனது சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் ஷாப் மற்றும் அனைத்து முன்னணி சில்லறை விற்பனையாளர்களிடமும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த டிவிகள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த டிவிகள் மீது என்னென்ன ஆபர்கள்?

இந்த சிறப்பு விற்பனையின் கீழ் வாங்க கிடைக்கும் எல்லா டிவிகள் மீதும் 20% வரையிலான கேஷ்பேக்; அதாவது ரூ.20,000 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும். மேலும் நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தும் போது கூடுதலாக 10% கேஷ்பேக்கையும் பெறுவீர்கள்!

98 இன்ச் நியோ கியூஎல்இடி டிவி, 85 இன்ச் மற்றும் 75 இன்ச் நியோ க்யூஎல்இடி 8கே மாடல்களை வாங்கும் நுகர்வோர்களுக்கு ரூ.1,54,999 மதிப்புள்ள கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடல்களுக்கு 2 வருட வாரண்டியும் இலவசமாக கிடைக்கும்.

அதே போல 85 இன்ச் மற்றும் 75 இன்ச் நியோ கியூஎல்இடி டிவி மாடல்கள், 75 இன்ச் தி ஃபிரேம் டிவி, 85 இன்ச் மற்றும் 75 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே க்யூஎல்இடி மாடல்களை வாங்கினால் ரூ.40,999 மதிப்புள்ள HW-S801B சாம்சங் சவுண்ட்பாரை இலவசமாக பெறுவீர்கள்.

65-இன்ச் முதல்.. 85-இன்ச் வரை!

65-இன்ச் முதல்.. 85-இன்ச் வரை!

இந்த சிறப்பு விற்பனையின் கீழ் 65 இன்ச் நியோ க்யூஎல்இடி 8கே டிவி மற்றும் 85 இன்ச், 75 இன்ச், 65 இன்ச் மற்றும் 55 இன்ச் நியோ கியூஎல்இடி டிவிகள் மற்றும் 85 இன்ச், 75 இன்ச், 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே க்யூஎல்இடி டிவிகள், மற்றும் 75-இன்ச் மற்றும் 85-இன்ச் Crystal 4K UHD TV-களையும் வாங்க முடியும்.

மேற்கண்ட எல்லா டிவிகளுடனும் நீங்கள் ரூ.18,499 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி A23 ஸ்மார்ட்போனை இலவசமாக பெறுவீர்கள்.

எந்தெந்த டிவியில் என்னென்ன ஸ்பெஷல்?

எந்தெந்த டிவியில் என்னென்ன ஸ்பெஷல்?

அம்சங்களை பொறுத்தவரை, நியோ க்யூஎல்இடி டிவிகள் ஆனது குவாண்டம் மினி எல்இடிகள் மூலம் இயங்கும் குவாண்டம் மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம், க்யூ-சிம்பொனி மற்றும் OTS ப்ரோவுடன் கூடிய டால்பி அட்மோஸ், இன்பில்ட் ஐஓடி ஹப் மற்றும் வீடியோ கால்களுக்கான ஸ்லிம்ஃபிட் கேமராவுடன் வருகிறது.

The Frame மற்றும் Crystal 4K UHD TV-களை பொறுத்தவரை, அவற்றின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் அவைகள் வழங்கும் உயர்தர சினிமா அனுபவம் தான் - ஹைலைட்!

சாம்சங்கின் Neo QLED 8K TV-களை பொறுத்தவரை, நியூரல் குவாண்டம் பிராசஸர் 8K மற்றும் குவாண்டம் மினி LED உடனான குவாண்டம் மேட்ரிக்ஸ் டெக்னாலஜி ப்ரோ, ஐகம்போர்ட் (EyeComfort) மோட் மற்றும் ஷேப் அடாப்டிவ் லைட் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது!

Best Mobiles in India

English summary
20 Percent Cashback Offer On Samsung 65 inch 75 inch and 85 inch Smart TV Models Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X