குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?

|

ஸ்மார்ட்போன் எப்படி பிரதான சாதனமாக உருவெடுத்து தற்போது அனைவர் கையிலும் இருக்கிறதோ? அதேபோல் தற்போது ஸ்மார்ட்வாட்ச் என்பதும் பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. உங்களிடம் ஸ்மார்ட்வாட்ச் இல்லை என்றால் யோசிக்காமல் இந்த புது வாட்ச்சை வாங்கலாம்.

ஆரோக்கிய கண்காணிப்பு அவசியம்

ஆரோக்கியம் கண்காணிப்பு, பயணத்தின் போது மொபைலை அணுகாமல் இருப்பது, வொர்க் அவுட், விளையாட்டு என பல ஆதரவுகளை ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. ஆரோக்கிய கண்காணிப்பு என்பது பலருக்கும் தேவையானதாக இருக்கிறது. அதுவும் உங்கள் கையிலேயே உடல்நல கண்காணிப்பு கருவி இருப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும். வரும் காலங்களில் ஸ்மார்ட்வாட்ச் என்பது அனைவரின் கையிலும் இருக்கும் சாதனமாக இருக்கப் போகிறது என்றால் அது மிகையல்ல.

2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?

புதிய Redmi Band 2

ஸ்மார்ட்போனின் இணைப்பு சாதனமாக இருக்கும் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. உங்களிடம் ஸ்மார்ட்வாட்ச் இல்லை என்றால் அதை வாங்குவதற்கு இது சரியான நேரமாகும். சியோமியின் ஸ்பின் ஆஃப் பிராண்ட் ஆன ரெட்மி புதிய Redmi Band 2 ஸ்மார்ட்பேண்ட்டை உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

30-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் முறைகள்

இந்த புதிய ஸ்மார்ட் பேண்ட் ஆனது டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகமானது, தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடாக இந்த ஸ்மார்ட் பேண்ட் விற்பனைக்கு கிடைத்து வருகிறது. ரெட்மி பேண்ட் 2 ஆனது 30க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள் மற்றும் இரத்த ஆக்ஸிஜன் மானிட்டர் உட்பட பல ஆரோக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. ரூ.3000 விலைப் பிரிவில் அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் இரண்டு வார பேட்டரி ஆயுளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Redmi Band 2 சிறப்பம்சங்கள்

Redmi Band 2 ஆனது 172 x 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.47 இன்ச் TFT LCD டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. 247 PPI பிக்சல் டென்சிட்டி மற்றும் 450 nits உச்ச பிரகாச ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச். 2.5D மைக்ரோ வளைந்த கிளாஸ் ஆதரவு இதில் இருக்கிறது. இந்த கிளாஸ் ஆனது ஃபிங்கர் ஸ்க்ராட்ச் எதிர்ப்புத் தன்மை கொண்டிருக்கிறது.

2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?

இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு

யோகா, ஹைகிங், அவுட் டோர் ரன்னிங் உட்பட 30க்கும் மேற்பட்ட விளையாட்டு ஆதரவுகளை இது கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் பேண்ட் இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு போன்ற ஆரோக்கியம் தொடர்பான பல அம்சங்களைக் கொண்டுள்ளது. மன அழுத்த கண்காணிப்பு, பெண்கள் ஆரோக்கிய கண்காணிப்பு என பல ஆரோக்கிய நல கண்காணிப்பு ஆதரவுகள் இதில் உள்ளது. பிற்பகல் தூக்கம் உட்பட அனைத்து வகையான தூக்க கண்காணிப்பு ஆதரவையும் இது கொண்டிருக்கிறது.

14 நாட்கள் பேட்டரி ஆயுள்

புதிய ரெட்மி பேண்ட் 2 இல் 210mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது சாதாரண பயன்பாட்டில் 14 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. அதேபோல் அதிக உபயோக நேரத்தில் 6 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் கிடைக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்னடிக் சார்ஜிங் ஆதரவும் இதனுடன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் பேண்ட்டை முழுமையாக சார்ஜ் செய்ய 120 நிமிடங்கள் ஆகும் என சியோமி தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 6 மற்றும் iOS 12

Redmi Band 2, 5 ATM வரையில் உள்ள நீரில் போட்டாலும் ஒன்றும் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ப்ளூடூத் 5.1 மற்றும் ஆண்ட்ராய்டு 6க்கு மேல் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுடனும் இணைக்கலாம். அதேபோல் iOS 12க்கு மேல் இயங்கும் அனைத்து ஐபோன்களுடனும் இதை இணைக்கலாம்.

2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?

Redmi Band 2 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Redmi Band 2 ஆனது 4,990 JPY (தோராயமாக ரூ.3,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்டுக்கு ஆரம்ப கால சலுகையும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட் பேண்டை சுமார் ரூ.2,800 என வாங்கலாம். இந்த புதிய பேண்டுக்கு வழங்கப்படும் ஆரம்பகால சலுகை பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்தியாவில் எப்போது விற்பனை?

இந்த ஸ்மார்ட் பேண்ட் ஆனது ஐவரி, ஆலிவ், க்ரீன், ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் என பல வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்பேண்ட் எப்போது கிடைக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இருப்பினும் இது விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
2 Weeks Battery Life Provides Redmi Band 2 Launched! Sale Start With Offer Price.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X