திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வாய்பிளக்க வைக்கும் விலையில் 2 பானாசோனிக் டிவிகள் அறிமுகம்!
சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தால் காணமால் போன டிவி பிராண்டுகளில், புகழ்பெற்ற ஜப்பானிய பிராண்டான பானாசோனிக்கும் (Panasonic) அடங்கும். தற்போது இந்நிறுவனம் "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்று கூறும்படியாக வாய்பிளக்க வைக்கும் விலையில் 2 புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
வாய்பிளக்க வைக்கும் விலை என்றதுமே சீன நிறுவனங்கள் எல்லாம் தெறித்து ஓடும் விலையில் 2 பானாசோனிக் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகமாகி விட்டதென்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்த 2 புதிய டிவிகளும் வாங்குபவர்களை வாய்ப்பிளக்க வைக்கும்படியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் ஒருகுறையும் சொல்ல முடியாத அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளன!

55-இன்ச் மற்றும் 65-இன்ச் Smart TV
பானாசோனிக் நிறுவனம் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் அளவுகளில் அதன் புதிய எல்இசட்950 ஓஎல்இடி (LZ950 OLED) ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'குவாலிட்டி'க்கு பெயர் போன பானாசோனிக்கின் இந்த புதிய டிவிகளின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? போன்ற விவரங்கள் இதோ:
பானாசோனிக் புதிய ஓஎல்இடி டிவிகளின் அம்சங்கள்
இந்த 2 டிவிகளுமே (ஸ்க்ரீன் சைஸ்-ஐ தவிர்த்து) ஒரே மாதிரியான அம்சங்களையே கொண்டுள்ளன. அதாவது இந்த 2 மாடல்களுமே ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) மூலம் இயக்கப்படுகிறது மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ் ஸ்டூடியோ சவுண்ட் (DTS Studio Sound) மற்றும் இன்-பில்ட் ட்வீட்டர்களுடனான ஹோம் தியேட்டர் (Home Theatre Built-in Tweeters) ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஸ்க்ரீனில் பெசல்களே கிடையாது!
டிசைனை பொறுத்தவரை பானாசோனிக் LZ950 ஓஎல்இடி சீரீஸ் ஸ்மார்ட் டிவிகளானது 4.5மிமீ அளவுள்ள அல்ட்ரா-ஸ்லிம் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இந்த ஸ்க்ரீனில் பெசல்களே கிடையாது; முழுவதும் டிஸ்பிளே தான்! மேலும் இந்த 2 மாடல்களுமே ஹை-குவாலிட்டி இமேஜ் ப்ராசஸரான 4கே ஸ்டூடியோ கலர் எஞ்சின் (4K Studio Colour Engine.) உடன் வருகின்றன.
தரம் குறைந்த கன்டென்ட்-ஐ கூட 4கே தரத்திற்கு உயர்த்தும்!
4கே ஸ்டூடியோ கலர் எஞ்சின் என்பது 4கே அப் கன்வெர்ட்டரை கொண்டுள்ளது, இது தரம் குறைந்த கன்டென்ட்-ஐ கூட 4கே தரத்திற்கு உயர்த்தும் திறன் கொண்டது. மேலும் இந்த டிவிகளில் மைக்ரோ டிமிங் தொழில்நுட்பமும் (Micro Dimming technology) உள்ளது. இது ஃபாஸ்ட்-ஃபேஸ்டு (Fast-paced) கன்டென்ட்டின் கான்ட்ராஸ்ட் மற்றும் ஸ்மூத்னெஸை (Smoothness) மேம்படுத்துகிறது. மேலும் இந்த அம்சம் டிவியின் ஒட்டுமொத்த செயல்திறனையும், பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அலெக்ஸா ஆதரவு!
பானாசோனிக்கின் இந்த 2 டிவிகளுமே ஹெக்ஸா க்ரோம் டிரைவ் (Hexa Chrome Drive), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற தொழில்நுட்பங்களுடன் வருகின்றன. மேலும் பானாசோனிக்கின் மிர்அலே (MirAIe) பிளாட்ஃபார்மானது கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட்டிற்கான ஆதரவையும் வழங்குகிறது.
பானாசோனிக் LZ950 OLED ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் விற்பனை
பானாசோனிக்கின் இந்த புதிய LZ950 OLED ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூ.1,99,990 முதல் தொடங்குகிறது. இந்த 2 டிவிகளுமே பானாசோனிக் ஸ்டோர்ஸ் (Panasonic Stores), டீலர் நெட்வொர்க்ஸ் மற்றும் பிரபலமான இ-காமர்ஸ் தளங்களின் வழியாக கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








