ரூ.1500 விலை குறைப்புடன் இந்த பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸை எப்படி வாங்கலாம்?
1மோர் நிறுவனமா, இந்தியாவில் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போனிற்கு பிஸ்டன் ஃபிட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னணி நிறுவனமான 1மோர்
சிறந்த இயர்போன்ஸ் மற்றும் சிறந்த ஆடியோ சத்தங்களுக்கான முன்னணி நிறுவனங்களில் 1மோர் நிறுவனமும் ஒன்றாகும். சிறந்த ஆடியோ சேவையைப் பல காலமாக வழங்கி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.

பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் 5.0
இயரபோன்ஸ் சந்தையில் தற்பொழுது வயர்லெஸ் இயரபோன்ஸ்களுக்கு தான் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்த 1மோர் நிறுவனம் புதிய பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் 5.0 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இன்-இயர் வடிவமைப்பு
புதிய பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடலில் மேக்னெடிக் இயர்பட்ஸ், வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இன்-இயர் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆடியோ தரம்
பேஸ் மற்றும் ஆடியோ தரத்தைச் சிறப்பாக வழங்குவதற்கு இந்த புதிய வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடலில் 10 என்.எம். டைனமிக் டிரைவர் யூனிட் மற்றும் 32Ω இம்பென்டன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

வாட்டர் ரெசிஸ்டண்ட் இயர்போன்ஸ்
இந்த இயர்போன்ஸ் இல் 130 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் IPX4 சான்றிதழ் மற்றும் இன்-லைன் கண்ட்ரோல் சேவை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

விலை குறிப்புடன் எப்படி வாங்கலாம்?
இந்தியச் சந்தையில், இந்த புதிய 1மோர் பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் வெறும் ரூ.3,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விற்பனையை முன்னிட்டு 1மோர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.2,499 என்ற விலையில் இந்த புதிய 1மோர் பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications