Home
Gadgets

15 நிமிட Quick Wash உடன் 1 கிலோ கெப்பாசிட்டி கொண்ட மினி வாஷிங் மெஷின் அறிமுகம்! என்ன விலை?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது மிஜியா (Mijia) பிராண்டின் கீழ் பல்வேறு வகையான சுவாரசியமான தயாரிப்புகளை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வரிசையில்.. வெறும் 1 கிலோ கெப்பாசிட்டி கொண்ட மினி வாஷிங் மெஷினை (Mini Washing Machine 1Kg Capacity) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்கள் மற்றும் திறன்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

வடிவமைப்பை பொறுத்தவரை மிஜியா 1 கிலோ மினி வாஷிங் மெஷின் ஆனது மிச் சிறிய வடிவமைப்பை பெற்றுள்ளது மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாஷிங் மெஷினின் நிகர எடை 22 கிலோ மற்றும் மொத்த எடை 25 கிலோ ஆகும், இதை இறுக்கமான இடங்களில் கூட எளிதாக வைக்க முடியும். இந்த வாஷிங் மெஷினின் மொத்த மின் நுகர்வு 750W என்று மதிப்பிடப்பட்டள்ளது.

1 கிலோ கெப்பாசிட்டி கொண்ட மினி வாஷிங் மெஷின் அறிமுகம்!

மிஜியா 1 கிலோ மினி வாஷிங் மெஷினின் அளவீடுகளை பொறுத்தவரை, இது 328 மிமீ அகலம், 452 மிமீ ஆழம், மற்றும் 461 மிமீ உயரம் உள்ளது. இதன் பேக்கேஜிங் பரிமாணங்கள் 420 மிமீ x 600 மிமீ x 578 மிமீ உள்ளன. ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி இது 0.03MPa முதல் 0.8MPa வரையிலான நீர் அழுத்த வரம்பிற்குள் திறம்பட செயல்படும்.

இந்த மினி வாஷிங் மெஷினின் மதிப்பிடப்பட்ட சலவை திறன் 1 கிலோ ஆகும் மற்றும் இதன் 0.5 கிலோ வரையிலான உலர்த்தும் திறனையும் கொண்டுள்ளது. ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி ஒரு நிமிடத்திற்கு 800 ரெவல்யூஷன்ஸ் என்கிற ஸ்பின் ஸ்பீடை எட்டும் திறனை கொண்டுள்ளது. இது திறமையான முறையில் ஈரப்பதத்தை அகற்றுவதற்கு போதுமான ஸ்பீட் ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இந்த மினி வாஷிங் மெஷின் சில புதுமையான அம்சங்களுடனும் வருகிறது. சுகாதார உணர்வுள்ள பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாஷிங் மெஷின் ஆனது 95°C இல் உயர்-வெப்பநிலை நீராவி ஸ்டெரிலைசேஷன் சுழற்சியை வழங்குகிறது. இதன்மூலம் எச்பிவி மற்றும் பல்வேறு பாக்டீரியாக்கள் உட்பட பொதுவான நோய்க்கிருமிகளை அகற்ற முடியும்; துணிகளுக்குள் ஊடுருவி, மருத்துவ தர தரத்திற்கு ஆடைக;ளை சுத்தப்படுத்த முடியும்.

இந்த மினி வாஷிங் மெஷினில் உள்ள இன்டெலிஜென்ட் டிடர்ஜென்ட் டிஸ்பென்ஸிங் சிஸ்டம் (Intelligent detergent dispensing system) ஆனது தானாகவே சுமை எடையை உணர்ந்து சோப்பின் அளவை சரிசெய்யும் திறனை கொண்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட துணி பராமரிப்புக்காக, இது மென்மையானஜென்டில் ட்ரை () என்கிற விருப்பத்தையும் கொண்டுள்ளது. இந்த விருப்பம் - பட்டுத்துணிகள் உட்பட மென்மையான துணி வகைகளை பாதுகாக்கும் நோக்கத்தின் கீழ், வெப்பநிலையை உன்னிப்பாக கட்டுப்படுத்துகிறது.

எல்லாவற்றை விட சுவாரசியமாக இந்த மினி வாஷிங் மெஷினில் 45 நிமிட க்விக் வாஷ் மற்றும் 15 நிமிட க்விக் வாஷ் ஆதரவும் உள்ளன மற்றும் துணிகளை துவைத்த 30 நிமிடங்களுக்குள் அகற்றப்படாவிட்டால், இந்த வாஷிங் மெஷின் ஆனது தானியங்கி ஒளிபரப்பு செயல்பாட்டையும் இயக்கும்.

இதுதவிர்த்து டிடி டைரக்ட் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இந்த வாஷிங் மெஷினில் , பல்வேறு துணி வகைகளுக்கான குறிப்பிட்ட வாஷிங் ப்ரோகிராம்களும் உள்ளன. மேலும் எம்ஐ ஹோம் ஆப்ஸ் (Mi Home Apps) மற்றும் XiaoAi வழியாக செய்யப்படும் வாய்ஸ் கமாண்ட்கள் மூலம் இதை ரிமோட் கண்ட்ரோலும் செய்யலாம்.

கூடுதலாக, இந்த வாஷிங் மெஷினின் செயல்பாட்டில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வழங்குவதற்காக, இதற்கு ஓடிஏ (OTA) வழியிலான அதாவது ஓவர்-தி-ஏர் வழியிலான ஆன்லைன் அப்கிரேட்கள் (Online Upgrades) கிடைக்கும் என்றும் ஷாவ்மீ வாக்குறுதி அளிக்கிறது. கடைசியாக இது சைல்ட் சேஃப்டி லாக்கையும் கொண்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஷாவ்மீ மிஜியா மினி வாஷிங் மெஷின் ஆனது சீனாவில், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.31,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இது ஜேடி.காம் (JD.com) வழியாக 1999 யுவான்கள் (274 அமெரிக்க டாலர்), அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.23,200 என்கிற சலுகை விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
1Kg Capacity Mini Washing Machine From Xiaomi Mijia with 15 Minute Quick Wash Smart Features Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X