Home
Gadgets

ஆஃபர்னா இதுதான்.. வெறும் ரூ.15,999 போதும்.. IPS டிஸ்பிளே.. 9000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

நம்ப முடியாத பட்ஜெட் விலையில் 11 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 9000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், எச்டிஆர் கேமரா போன்ற பீச்சர்களுடன் களமிறங்கிய ரெட்மி பேட் 2 (REDMI Pad 2) மாடலானது, இப்போது டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. வை-பை + 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்ட்ரா 6என்எம் சிப்செட் கொடுக்கும் இந்த ரெட்மி பேட் 2 டேப்லெட்டின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி பேட் 2 அம்சங்கள் (REDMI Pad 2 Specifications): 11 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டி,ஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன், 274 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

ஆஃபர்னா இதுதான்.. வெறும் ரூ.15,999 போதும்.. IPS டிஸ்பிளே.. எந்த மாடல்?

இதுபோக வெட் டச் (Wet Touch) சப்போர்ட் கொடுக்கிறது. மேலும், 10X சூப்பர் ரெசொலூஷன், டிசி டிம்மிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி வருகிறது. இருப்பினும், 15W சார்ஜிங் அடாப்டர் மட்டுமே கிடைக்கிறது.

இந்த ரெட்மி பேட் 2 மாடலில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்ட்ரா 6என்எம் (MediaTek Helio G100 Ultra 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) வருகிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 8 ஜிபிக்கான ரேம் பூஸ்ட் (RAM Boost) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் டெலிப்ராம்டர் மோட் (Teleprompter Mode), எச்டிஆர் மோட் (HDR Mode) கிடைக்கிறது. மேலும், 1080p வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இதில் எச்டிஆர் மோட் (HDR Mode) கிடைக்கிறது. இந்த ஷூட்டரிலும் 1080p வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) கிடைக்கிறது.

இந்த ரெட்மி பேட் 2 மாடலானது ஆடியோவில் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. இதுபோக ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது.

வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), டூயல் 4ஜி (Dual 4G) கிடைக்கிறது. இந்த ரெட்மி பேட் 2 மாடலின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை + 4ஜி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on REDMI Pad 2 With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X