Home
Gadgets

ரூமுக்கு 1 வாங்கலாமே.. ரூ.1999 போதும்.. ரிமோட் உடன் 152-இன்ச் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

யாரை கேட்டாலும் சொல்லுவார்கள் - எவ்வளவு பெரிய டிவி இருந்தாலும், சினிமே தியேட்டர் போன்ற வியூவிங் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கவில்லையே என்று சலித்து கொள்பவர்கள் தங்கள் ரூம்களில் ப்ரொஜெக்ட்ர்களை வைக்கலாம் என்று.. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இதற்காகவே பல மலிவு விலை ப்ரொஜெக்டர்களும் மார்க்கெட்டில் உள்ளன.

அதிலொன்றுதான் - மெகாவைஸ் யுC 500 ப்ரொஜெக்டர் (MEGAWISE UC 500 Projector) மாடல் ஆகும். இது ரிமோட் கண்ட்ரோலருடன் கூடிய 400எல்எம் கையடக்க மினி ஹோம் தியேட்டர் எல்இடி ப்ரொஜெக்டர் ஆகும். இதை 3500lm எல்இடி வயர்டு ப்ரொஜெக்டர் என்றும் கூறலாம். இது HDMI, AV, SD, USB இன்டர்பேஸ் களை ஆதரிக்கிறது.

ரூ.1999 போதும்.. ரிமோட் உடன் 152-இன்ச் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 60% தள்ளுபடி விலையின் கீழ் ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.4,999 ஆகும். ஆக மெகாவைஸ் யுC 500 ப்ரொஜெக்டர் மாடல் ஆனது ரூ.3000 நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த ப்ரொஜெக்டர் மாடலின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பவர் பேங்க் சப்ளை: இந்த மினி கையடக்க ப்ரொஜெக்டர் ஒரு பவர் அடாப்டர் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது இதில் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி இல்லை. இதை மொபைல் ஃபோன் சார்ஜர், கார் சார்ஜர் அல்லது மைக்ரோ-யுஎஸ்பி இன்டர்பேஸ் வழியாக மூலமாகவும் இயக்கலாம். அது 5V/2.5A-ஐ ஆதரிக்க வேண்டும்.

சிறியது மற்றும் கையடக்கமானது: இந்த மினி வீடியோ ப்ரொஜெக்டர் சிறியதாகவும் கையடக்கமாகவும் உள்ளது, மேலும் பாக்கெட் அல்லது பையில் கூட எடுத்து செல்லலாம். குழந்தைகள் கூட இதை எளிதாக பிடிக்க முடியும். வீட்டிலோ, வெளிப்புற முற்றத்திலோ, பயணத்திலோ, முகாமிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ நீங்கள் திரைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளை கண்டு மகிழலாம்.

ப்ரொஜெக்ஷன் ஸ்க்ரீன்: இந்த ப்ரொஜெக்டரை பயன்படுத்தி தூரத்திலிருந்து பார்க்கும்போது, ​​அது அதிகபட்சமாக 152 இன்ச் வரை படத்தை பாய்ச்சும். ஆனால் நல்ல வியூவிங் எக்ஸ் பீரியன்ஸிற்கு 60 - 100 இன்ச் என்கிற அளவு பரிந்துரைக்கப்படுகிறது. இது மொபைல் போன்கள் மற்றும் ஐபேட்களிலிருந்து விலக விரும்புபவர்களுக்கு மிகவும் மலிவான மாற்றாக இருக்கும்.

ஒருவேளை இன்னும் கொஞ்சம் அதிக விலைக்கு.. இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆன ப்ரொஜெக்டரை வாங்க விரும்பினால்.. அமேசான் இந்தியாவில் 85% டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கும் பான்சேபா ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (PANSEBA Smart Projector) மாடலை வாங்கலாம். இது ஆண்ட்ராய்டு 11 மற்றும் 180 டிகிரி சுழற்றக்கூடிய ஸ்டாண்ட் உடன் வரும் எச்டி ப்ரொஜெக்டர், 1080பி 4கே, வைஃபை6 பிடி அம்சங்கள் கொண்ட ப்ரொஜெக்டர் மாடல் ஆகும்.

என்ன விலை? பான்சேபா ஸ்மார்ட் ப்ரொஜெக்டரின் அசல் எம்ஆர்பி விலை ரூ.19,999 ஆகும். ஆனால், தற்போது இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் 85% நேரடி தள்ளுபடியின் கீழ்.. அதாவது எந்த பேங்க் கார்டு டிஸ்கவுண்ட்டும் இல்லாமல்.. நேரடி விலைக்குறைப்பின் கீழ் வெறும் ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கிறது.

பான்சேபா ஸ்மார்ட் ப்ரொஜெக்டரின் முக்கிய அம்சங்கள்: இது 180 டிஜிட்டி சுழற்றக்கூடிய மினி ப்ரொஜெக்டர் ஆகும். ப்ரொஜெக்டரின் அடிப்பாகத்தில் 180 டிகிரி சுழலும் பிராக்கெட் உள்ளது. இது, சுவரில் இருந்து சீலிங் வரை பல்வேறு திசைகளில் ப்ரொஜெக்டரை திருப்ப அனுமதிக்கிறது. 40 முதல் 130 அடி வரையிலான எந்த கோணத்திலிருந்தும் திரையில் தெளிவான படத்தை பார்க்கலாம்.

இது எச்டி ப்ரொஜெக்ஷன் ஸ்க்ரீனையும் கொண்டுள்ளது. இந்த மூவி ப்ரொஜெக்டர் 40 முதல் 130 இன்ச் அளவிலான ப்ரொஜெக்ஷன் ஸ்க்ரீனை வழங்குகிறது, இதன் உகந்த ப்ரொஜெக்ஷன் தூரம் 5.51 அடி ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, இது 4கே 1080பி-ஐ ஆதரிக்கிறது. கூடவே ஆட்டோமெட்டிக் ஹாரிசாண்டல் கீஸ்டோன் கரெக்ஷன் (Automatic horizontal keystone correction) செயல்பாடு ஆனது உங்களுக்கு சிறந்த ஸ்க்ரீன் பொஷிஷனை வழங்குகிறது.

இந்த கையடக்க மினி ப்ரொஜெக்டரில் எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), பில்ட்-இன் 3.5மிமீ ஹெட்போன் போர்ட்கள் உள்ளன (எச்டிஎம்ஐ கேபிளை நீங்கள் தனியாகத்தான் வாங்க வேண்டும்). இது டிவி ஸ்டிக்/பாக்ஸ், கேம் கன்சோல்கள், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், டிவிடி பிளேயர்கள் மற்றும் யுஎஸ்பி ஸ்டிக்குகள் போன்றவற்றுக்கு ஏற்றது. இதை ஹோம் தியேட்டர், பார்ட்டி, வேலை மற்றும் பலவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
152 inch MEGAWISE UC 500 Projector Amazon India Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X