இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. 150 இன்ச்.. 4K சப்போர்ட்.. ஆட்டோ போகஸ்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4கே ப்ரொஜெக்டர் ஒன்று மலிவு விலையில் கிடைக்கிறது. கீஸ்டோன் கரெக்ஷன், ஆட்டோ போகஸ் (Auto Focus), 150 இன்ச் புரொஜெக்சன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஜெப்ரானிக்ஸ் 4கே ப்ரொஜெக்டரில் உள்ளன. இப்போது இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 (ZEBRONICS PIXAPLAY 67) ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,980 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த சாதனத்தை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 அம்சங்கள் (ZEBRONICS PIXAPLAY 67 Specifications): ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலானது 150 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கிறது. ஆகவே 100 இன்ச், 150 இன்ச் டிவிகளை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலில் 8000 லூமென்ஸ் மற்றும் 1080pநேட்டிவ் ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 4K சப்போர்ட் ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் இந்த சாதனத்தில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது.
குறிப்பாக ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் (auto keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பல்வேறு ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த பிக்ஸாபிளே 67 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு 200 டிகிரி டில்ட் (200° tilt) ஆதரவு கொடுக்கிறது இந்த சாதனம்.

அதுவும் பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், ஆடியோ ஜாக், ஆர்45 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
BT ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








