Home
Gadgets

ஆர்டர் பொளக்குது.. ரூ.10,999 பட்ஜெட்ல 140 இன்ச் LED புரொஜெக்டர்.. இன்-பில்ட் ஸ்பீக்கர்கள்.. ரிமோட் கன்ட்ரோல்!

32 இன்ச் டிவி வாங்கும் பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு 140 இன்ச் எல்இடி புரொஜெக்டர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதிலும் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன், இன்-பில்ட் ஸ்பீக்கர்கள், ரிமோட் கன்ட்ரோம் மற்றும் மல்டி கனெக்விட்டி பீச்சர்கள் கொடுக்கப்பட்டால் சொல்லவா வேண்டும்! பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் அறக்க பறக்கும் விதமாக ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே 54 (Zebronics Zeb PixaPlay 54) எல்இடி புரொஜெக்டர் களமிறங்கி இருக்கிறது. இந்த ஜெப்ரானிக்ஸ் மாடலின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

கம்மி பட்ஜெட்டில் புரொஜெக்டர் வாங்கும்போது, அதில் பிரீமியம் குவாலிட்டி எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் சில புரொஜெக்டர்கள் பட்ஜெட்டிலும் மீடியம் குவாலிட்டி அவுட்புட் கொடுப்பதை மறுக்கவும் முடியாது. இப்படி மார்கெட்டில் தனியிடம் பிடித்த ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஜெப் பிக்ஸாபிளே 54 எல்இடி புரொஜெக்டர் ஆர்டருக்கு வந்துள்ளது.

140 இன்ச் LED புரொஜெக்டர்.. ரூ.10,999 பட்ஜெட்.. இன்-பில்ட் ஸ்பீக்கர்!

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே 54 அம்சங்கள் (Zebronics Zeb PixaPlay 54 Specifications): இந்த ஜெப்ரானிக்ஸ் மாடானது, கிரீன் மற்றும் ஒயிட் கலரில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இதுவொரு ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் (Smart LED Projector) மாடலாகும். 3800 லுமன்ஸ் (Lumens) சப்போர்ட் வருகிறது. 140 இன்ச் வரையில் ஸ்கிரீன் புரொஜெக்சன் கிடைக்கிறது.

1080p ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD) தரத்தில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். அட்ஜஸ்டபிள் லென்ஸ் (Adjustable Lens) உள்ளது. ஆகவே, ஆட்டோ கீஸ்டோன் அடாப்சன் (Auto Keystone Adaptation) சப்போர்ட் வருகிறது. இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே 54 மாடலின் எல்இடி லாம்ப் 50,000 ஹவர்ஸ் வரையில் லைப்-டைம் கொடுக்கும்.

குவாட் கோர் (Quad Core) சிப்செட் வருகிறது. ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1), டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi), ஸ்கிரீன் காஸ்டிங் (Screen Casting) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) போன்ற மல்டி கனெக்டிவிட்டி (Multi Connectivity) சப்போர்ட் வருகிறது. அதேபோல எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) மற்றும் ஏயுஎக்ஸ் அவுட் (AUX OUT) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.

ஆகவே, பெரும்பாலான கனெக்டிவிட்டிகளை பேக் செய்வதால், எளிதாக மொபைல் உள்ளிட்ட டிவைஸ்களில் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே 54 மாடலில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் (Built-in Speaker) வருகின்றன. ஆகவே, போர்டபிலிட்டி அவுட்புட் பட்டையை கிளப்ப்பும்படி இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் வருகிறது.

மிராகாஸ்ட் (Miracast) மற்றும் ஐஓஎஸ் ஸ்கிரீன் மிரரிங் (iOS Screen mirroring) வருகிறது. ஆப் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே 54 மாடலுக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. ஜெப்ரானிக்ஸ் சவுண்ட்பார் (Zebronics soundbar) கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் கம்மியான பட்ஜெட்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

வெறும் ரூ.10,999 பட்ஜெட்டில் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே 54 மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமே. ஆகவே, விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட்டில் நல்ல அவுட்புட் கொடுக்கும் புரொஜெக்டர் வேண்டுமானால், இந்த ஜெப் பிக்ஸாபிளே 54 மாடலை தேர்ந்தெடுங்கள்.

மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பதால், 140 இன்ச் வரையில் ஸ்கிரீன் புரொஜெக்சன் செய்யும்போது, சிறிது பிக்சல் உடையலாம். அதேபோல ஸ்பீக்கர்களில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்க முடியாது. பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடியோவை மட்டுமே கவர் செய்யும். ஓடிடி மற்றும் ஸ்கிரீன் காஸ்ட் போன்றவற்றுக்கு ஆப்கள் சப்போர்ட் இந்த மாடலில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
140 inch Zebronics ZEB PixaPlay 54 Projector Launched Sale Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X