Home
Gadgets

ஆளுக்கு ஒரு புது TV பார்சல்.. ஒரே நேரத்தில் 14 Samsung டிவிகள் அறிமுகம்.. 50 முதல் 98-இன்ச் வரை.. என்ன விலை?

ஒரே ஒரு ஸ்மார்ட் டிவியை (Smart TV) அறிமுகம் செய்துவிட்டு "ஆஹா ஓஹோவென்று" பில்டப் செய்யும் நிறுவனங்களுக்கு மத்தியில் சாம்சங் (Samsung) நிறுவனமானது, 50-இன்ச் முதல் 98-இன்ச் (50-inch to 98-inch) வரையிலாக 14 புதிய ஸ்மார்ட் டிவிகளை சத்தமின்றி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில் அதன் ஸ்மார்ட் டிவிகளின் வரம்பை விரிவுபடுத்தும் நோக்கத்தின் கீழ், சாம்சங் நிறுவனம் அதன் நியோ க்யூஎல்இடி 8கே டிவிகள் (Neo QLED 8K TVs) மற்றும் நியோ க்யூஎல்இடி 4கே டிவிகளின் (Neo QLED 4K TVs) 2023 லேட்டஸ்ட் ஜெனரேஷன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்துல 14 Samsung டிவிகள் இந்தியாவில் அறிமுகம்!

8கே மாடல்களின் விலை: 2023 சாம்சங் நியோ க்யூஎல்இடி 8கே டிவியானது 4 மாடல்களின் கீழ் மொத்தம் 5 அளவுகளில் வாங்க கிடைக்கும். அதாவது QN990C (98-இன்ச்), QN900C (85-இன்ச்), QN800C (75-இன்ச் மற்றும் 65-இன்ச்), QN700C (65-இன்ச்) என்கிற நான்கு மாடல்களின் கீழ் 5 அளவுகளில் வாங்க கிடைக்கும். இந்த மாடல்களின் விலை ரூ.3,14,990 முதல் தொடங்குகிறது.

4கே மாடல்களின் விலை: 2023 சாம்சங் நியோ க்யூஎல்இடி 4கே டிவியானது 3 மாடல்களின் கீழ் மொத்தம் 9 அளவுகளில் வாங்க கிடைக்கும். அதாவது QN95C (65-இன்ச் மற்றும் 55-இன்ச்), QN90C (85-இன்ச், 75-இன்ச், 65-இன்ச், 55-இன்ச், 50-இன்ச்), QN85C (65-இன்ச், 55-இன்ச்) என்கிற மாடல்களின் கீழ் வெவ்வேறு அளவுகளில் வாங்க கிடைக்கும்.

சாம்சங் நியோ க்யூஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை ரூ.1,41,990 முதல் தொடங்குகிறது. மேற்கண்ட அனைத்து புதிய சாம்சங் டிவிகளுமே சாம்சங் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் (Samsung Retail Stores), சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் சாம்சங் ஷாப் (Samsung Shop) வழியாக வாங்க கிடைக்கின்றன.

இலவச சவுண்ட் பார் உடன் விற்பனை: விற்பனை மற்றும் சலுகைகள்: விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி வரை, சாம்சங்கின் இந்த புதிய நியோ க்யூஎல்இடி டிவிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நியோ க்யூஎல்இடி 8கே டிவிகளுடன் ரூ.99,990 மதிப்புள்ள சாம்சங் சவுண்ட்பார் HW-Q990-ஐயும், நியோ க்யூஎல்இடி 4கே டிவிகளுடன் ரூ.44,990 மதிப்புள்ள சாம்சங் சவுண்ட்பார் HW-Q800-ஐயும் இலவசமாக பெறுவார்கள்.

4கே மற்றும் 8கே மாடல்களின் அம்சங்கள்: அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் நியோ க்யூஎல்இடி 8கே மற்றும் 4கே டிவிகளானது, சாம்சங்கின் மேம்பட்ட நியூரல் க்வாண்டம் ப்ராசஸர் (Neural Quantum Processor) மூலம் இயக்கப்படுகின்றன, இது உயிரோட்டமான காட்சிகளுக்காக ஷேப் அடாப்டிவ் லைட் கண்ட்ரோல் மற்றும் ரியல் டெப்த் என்ஹான்சர் ப்ரோ போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

இதுதவிர்த்து சாம்சங்கின் சொந்த விர்ச்சுவல் அசிஸ்டென்ட் ஆன பிக்ஸ்பி (Bixby) உடன் சேர்த்து, இந்த டிவிகள் பில்ட்-இன் அலெக்சாவுடனும் (Alexa Built-in) வருகின்றன. வேறுபாட்டை பொறுத்தவரை 8கே டிவிகள் ஆனது சூப்பர் அல்ட்ராவைடு கேம்வியூ (Super Ultrawide GameView) உடனாக மோஷன் எக்ஸ்செலரேட்டர் டர்போ ப்ரோ (Motion Xcelerator Turbo Pro) உடன் வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 New 2023 Samsung Neo QLED 8K and 4K Smart TV Models Launched in India Check Price Sale Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X