தூக்குங்கடா அந்த தங்கத்த! ஆபரில் 12.1 இன்ச் டிஸ்பிளே.. 12GB ரேம்.. 9510mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த பேட்?
3K ரெசொலூஷன் கொண்ட 12.1 இன்ச் டிஸ்பிளே, 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9510mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரியுடன் வெளியான ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடலுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஏஐ டூல் பாக்ஸ், ஒன் டச் டிரான்ஸ்மிஷன், டால்பி விஷன் போன்ற பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் இந்த டேப்லெட்டின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் 2 அம்சங்கள் (OnePlus Pad 2 Specifications): இந்த டேப்லெட்டில் 12.1 இன்ச் (3200 x 2120 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 3K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இது ஓடிடி மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கும் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் கொடுக்க கூடியது.

மேலும், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் மற்றும் 303 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கிறது. இதுபோக 540Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் குவாலிட்டி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பர்ஃபாமென்ஸ் பக்கமும் அப்படித்தான், பிரீமியம் அவுட் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல், ஏஐ பீச்சர்களுடன் ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) பேக் செய்துள்ளது. மேலும், ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8 Gen 3) சிப்செட் மற்றும் டிஸ்பிளே ஏற்ப அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் யூனிட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுபோக ஹைப்பர்பூஸ்ட் (HyperBoost) கேமிங் டெக்னாலஜி வருகிறது. கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்க ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது. அதோடு ஹாலோ ஆடியோ (Holo Audio) வருகிறது. இதன் மூலம் கஸ்டமைசபிள் ஆடியோ மோட்களை செய்து கொள்ளலாம். ஸ்டீரியோ அவுட்புட் கொடுக்க 6 ஸ்பீக்கர்கள் வருகின்றன.
ஆகவே, ஆடியோவிலும் பிரீமியம் குவாலிட்டி எதிர்பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடலில் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஏஐ ஸ்பீக்கர் (AI Speaker), ஏஐ சம்மரி (AI Summary), ரெக்கார்டிங் சம்மரி (Recording Summary) மற்றும் ஏஐ ரைட்டர் (AI Writer) மற்றும் ஏஐ டூல் பாக்ஸ் போன்றவை கிடைக்கின்றன.
டிவைஸ் சின்ங் சப்போர்ட் உள்ளது. ஆகவே, மொபைலுடன் வீடியோ & இமேஜ் சின்ங் (Video & Image Sync), கிளிப்போர்ட் சின்ங் (Clipboard Sync), நோட்டிபிகேஷன் சின்ங் (Notification Sync), ஆப் ரிலேய் (App Relay) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் பேட் 2 விலை (OnePlus Pad 2 Price): இந்த டேப்லெட்டின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.37,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வருகிறது. நிம்புஸ் கிரே (Nimbus Gray) கலரில் ஆர்டருக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








