Home
Gadgets

அம்பானியால மட்டுமே முடியும்! ரூ.14,000-க்கு 100GB க்ளவுட் ஸ்டோரேஜ், 1 வருட Quick Heal, 11.6-இன்ச் லேப்டாப்!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, கடந்த 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் (India Mobile Congress - IMC) நிகழ்வின் போது தனது புதிய சூப்பர்-பட்ஜெட் லேப்டாப்பை அறிமுகம் செய்தது.

இது முழுக்க-முழுக்க, முதல் லேப்டாப்பை வாங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு லேப்டாப் ஆகும். கூடவே "டைட்" ஆன பட்ஜெட் கொண்டவர்களுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். அதாவது இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியானதால், மிட்-ரேன்ஜ் மற்றும் பிரீமியம் விலை லேப்டாப்களில் இருக்கும் அளவிலான சக்தியை இதில் எதிர்பார்க்க முடியாது. அதாவது ஹெவியான மல்டி-டாஸ்கிங்கை ஸ்மூத்தாக கையாளும் திறனை எதிர்பார்க்க கூடாது.

JioBook: ரூ.14000-க்கு 100GB க்ளவுட் ஸ்டோரேஜ், 1 வருட Quick Heal!

இதனால் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோபுக் (JioBook) லேப்டாப்பை "இந்தியாவின் முதல் லேர்னிங் புக்" என்று அழைக்கிறது. நீங்கள் கோடிங் கற்க விரும்பினால், அதை இந்த லேப்டாப்பில் செய்யலாம். கோடிங் மட்டுமல்ல, டாகுமெண்ட்களை எழுதுதல் அல்லது உருவாக்குதல், ப்ரெசன்ட்டேஷன்களை தயாரிப்பது மற்றும் காட்சிப்படுத்துவது, மின்னஞ்சல்களை கையாளுவது, பள்ளி / கல்லூரி பணிகளை செய்வது போன்ற விஷயங்களை ஜியோபுக் லேப்டாப் வழியாக தாராளமாக செய்யலாம்

இது 4ஜி-ஐ ஆதரிப்பதால், இண்டர்நெட் அணுகலை பெற வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படியாக இந்த ஜியோபுக் 4ஜி லேப்டாப்பில் என்னென்ன அம்சங்கள் உள்ளது? இந்த லேப்டாப்பின் விலை நிர்ணயம் என்ன? இதன்மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? இதை எங்கே வாங்குவது? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

JioBook: ரூ.14000-க்கு 100GB க்ளவுட் ஸ்டோரேஜ், 1 வருட Quick Heal!

ஜியோபுக் 4ஜி லேப்டாப்பின் முக்கிய அம்சங்கள்: ஜியோபுக் 4ஜி லேப்டாப் ஆனது 1.6-இன்ச் ஆன்டி-க்ளேர் எச்டி ஸ்க்ரீன் (Anti-glare HD screen) உடன் வருகிறது. இது மிகவும் கச்சிதமான மற்றும் மிகவும் மெல்லிய வடிவமைப்பை (Compact and Slim Design) பெற்றுள்ளது.

மீடியாடெக் ஆக்டா-கோர் சிப் (MediaTek octa-core chip) மூலம் இயக்கப்படுகிம் ஜியோபுக் 4ஜி லேப்டாப் ஆனது ரிலையன்ஸ் ஜியோவால் உருவாக்கப்பட்ட இயங்குதளமான ஜியோஓஎஸ் (JioOS) கொண்டு இயங்குகிறது. ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த லேப்டாப் 8 மணிநேரத்திற்கும் மேலான பேட்டரி லைஃப்பை (Battery Life) வழங்கும். ரூ.15,000 க்குள் கிடைக்கும் ஒரு லேப்டாப்பில் 8 மணி நேர பேட்டரி என்பது கவனிக்கத்தக்க ஒரு அம்சமாகும்.

JioBook: ரூ.14000-க்கு 100GB க்ளவுட் ஸ்டோரேஜ், 1 வருட Quick Heal!

சுவாரசியமாக ஜியோபுக் வழியாக எஜுகேஷன் சேனல்களை (Educational channels) அணுக ஜியோடிவியை (JioTV) பயன்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் கேம்களை விளையாட விரும்பினால், கிளவுட் கேமிங்கை இயக்கும் ஜியோகேம்ஸை (JioGames) அணுகலாம். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை 64ஜிபி உள்ளது; ரேம்-ஐ பொறுத்தவரை 4ஜிபி LPDDR4 ரேம் உள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டில் இது போதுமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஜியோபுக் 4ஜி லேப்டாப் மீது கிடைக்கும் சலுகைகளை பொறுத்தவரை, இதன்மீது இப்போது இரண்டு சலுகைகள் கிடைக்கிறது. ஒன்று - ஒரு வருடத்திற்கான குவிக் ஹீல் சந்தா (Quick Heal subscription); இரண்டாவது - டிஜிபாக்ஸில் இருந்து 100ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் (100GB cloud storage from DigiBoxx). கடைசியாக ஜியோபுக் 4ஜி லேப்டாப் ஆனது டூயல்-பேண்ட் வைஃபை நெட்வொர்க்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

ஜியோபுக் 4ஜி லேப்டாப்பின் விலை மற்றும் விற்பனை: ஜியோபுக் 4ஜி லேப்டாப்பின் விலை நிர்ணயம் ரூ.14,701 ஆகும். இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, பேஸிக் ஆன வேலைகளை செய்ய விரும்பும் பலரும் ஜியோவின் இந்த மலிவு விலை லேப்டாப்பை ஒரு சிறந்த ஆப்ஷனாக கருதுகின்றனர். நீங்கள் எப்படி!

More from GizBot

Best Mobiles in India

English summary
100GB Cloud Storage 1 Year Quick Heal Subscription Offer on Jio 4G Laptop Check JioBook Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X