ஆப்பிள் வாட்ச்சாவது.. மாங்காய் வாட்ச்சாவது.. 100மீ ஆழ நீருக்குள் அசால்ட் பண்ணும் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!
நீருக்கடியில், சுமார் 100 மீட்டருக்கும் மேலான ஆழத்தில் கூட அசால்ட் ஆக வேலை செய்யும் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட் வாட்ச்? அதன் விலை நிர்ணயம் என்ன? நீர் எதிர்ப்பு திறனை தவிர்த்து இந்த வாட்ச்சில் வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது சீன நிறுவனமான ஹுவாயின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆன ஹூவாய் வாட்ச் அல்டிமேட்-ஐ (Huawei Watch Ultimate) பற்றித்தான். இது இந்நிறுவனத்தின் ஹவாய் வாட்ச் ஜிடி 3 ப்ரோவை விட சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் கார்மினின் லேட்டஸ்ட் வாட்ச்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

ஹூவாய் வாட்ச் அல்டிமேட் அம்சங்கள்: இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 1.5-இன்ச் எல்டிபிஓ அமோஎல்இடி (LTPO AMOLED) சர்க்குலர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஸிர்கோனியம் (Zirconium) அடிப்படையிலான லிக்விட் மெட்டல் கேஸ் மற்றும் ஹைட்ரஜனரேடட் நைட்ரைல் ரப்பர் ஸ்ட்ராப் (Hydrogenated Nitrile Rubber Strap) ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
பெஸலில் (Bezel) செராமிக் ஃபினிஷை கொண்டுள்ள இந்த ஹூவாய் வாட்ச் 530mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி (சிங்கிள் சார்ஜில்) இது சராசரியான பயன்பாட்டின் கீழ் 14 நாட்களுக்கு பேட்டரி லைஃப்பை வழங்கும் மற்றும் சுறுசுறுப்பான அல்லது அதிகப்படியான பயன்பாட்டின் கீழ் 8 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும்.
இந்த ஸ்மார்ட் வாட்ச் உடன் அனுப்பப்படும் சார்ஜர், இதை வெறும் 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளது. மேலும் இது க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங்கையும் (Qi Wireless Charging) ஆதரிக்கிறது. சென்சார்களை பொறுத்தவரை, இதில் ஹார்ட் ரேட் (Heart Rate), ப்ளட் ஆக்ஸிஜென் (SpO2) மற்றும் ஈசிஜி (ECG) போன்ற மானிட்டர்கள் உள்ளன.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த வாட்ச் தீவிரமான ஆழ்கடல் அழுத்தத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த வாட்ச் ஐஎஸ்ஓ 22810 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கை பெற்றுள்ளது; ஆகையால் இந்த வாட்ச்சால் 110 மீட்டர் ஆழ நீரில், 24 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்க முடியும்.
கடைசியாக இந்த வாட்சில் எக்ஸ்பெடிஷன் மோட் (Expedition mode) உள்ளது. இது டூயல் ஃப்ரெக்வென்சி ஃபைவ்-சிஸ்டம் ஜிஎன்எஸ்எஸ் பொசிஷனிங் (Dual-frequency five-system GNSS positioning) திறன்களை பயன்படுத்தி மிகவும் துல்லியமான மேப்பிங்கை வழங்குமென்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூவாய் வாட்ச் அல்டிமேட் விலை மற்றும் விற்பனை: இந்த வாட்ச், ரப்பர் ஸ்ட்ராப் உடனான எக்ஸ்பெடிஷன் பிளாக் (Expedition Black) மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப் உடனான வோயேஜ் ப்ளூ (Voyage Blue) என்கிற 2 வெர்ஷன்களின் கீழ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அவைகள் (இந்திய மதிப்பின்படி) முறையே ரூ.72,300 மற்றும் ரூ.84,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவில் எப்போது அறிமுகமாகும், இங்கே விற்பனை செய்யப்படுமா என்கிற விவரங்கள் இன்னும் பகிரப்படவில்லை. தற்போது வரையிலாக இது இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் சீன சந்தைகளில் மட்டுமே வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








