Home
Gadgets

100 இன்ச் டிவியை அறிமுகம் செய்த AKAI.. டால்பி அட்மாஸ்.. எச்டிஆர் 10 பிளஸ்.. விலையை சொன்னா நம்புவீங்களா?

அகாய் (AKAI) நிறுவனம் தனது புதிய 75 இன்ச் மற்றும் 100 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது அகாய் 4கே கியூஎல்இடி டிவி 75-இன்ச் மற்றும் 100 இன்ச் டிவிகள் தான் வெளிவந்துள்ளன. தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த புதிய டிவிகள் வெளிவந்துள்ளன. இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அகாய் 4கே கியூஎல்இடி டிவி அம்சங்கள் (AKAI 4K QLED TV Specifications): அதாவது அகாய் 4கே கியூஎல்இடி டிவி 75 இன்ச் (AKAI 4K QLED TV 75 inch) மாடல் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 4கே கியூஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (350 nits of peak brightness)), எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் எச்எல்ஜி உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

 100 இன்ச் டிவியை அறிமுகம் செய்த AKAI.. டால்பி அட்மாஸ்..விலை?

அகாய் 4கே கியூஎல்இடி டிவி 100 இன்ச் (AKAI 4K QLED TV 100 inch) மாடல் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) கொண்ட 4கே கியூஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (400 nits of peak brightness), எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+) மற்றும் எச்எல்ஜி (HLG) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறந்த ஆடியோ மற்றும் காட்சி வெளியீடுகளுக்காக டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த புதிய 75 இன்ச் மற்றும் 100 இன்ச் டிவிகள். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த புதிய டிவிகள் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த டிவிகளில் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் உள்ளது. அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் மூலம் இந்த அகாய் 4கே கியூஎல்இடி டிவி மாடல்கள் இயங்குகின்றன. எனவே மேம்பட்ட புதிய அம்சங்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.

அதேபோல் கூகுள் பிளே (Google Play), கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant), மிராகாஸ்ட் (Miracast), குரோம்காஸ்ட் (Chromecast)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த அகாய் 75 இன்ச் மற்றும் 100 இன்ச் மாடல்களில் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகளின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அகாய் நிறுவனம்.

 100 இன்ச் டிவியை அறிமுகம் செய்த AKAI.. டால்பி அட்மாஸ்..விலை?

இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் (2 USB ports), மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள்(3 HDMI ports), லேன் போர்ட் (LAN port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளன இந்த அகாய் 4கே கியூஎல்இடி டிவி மாடல். குறிப்பாக மெலிதான பெசல்ஸ் டிசைன் உடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அகாய் 4கே கியூஎல்இடி டிவி 100 இன்ச் மாடலின் விலை ரூ.3,99,990-ஆக உள்ளது. அதேபோல் இதன் 75-இன்ச் மாடலின் விலை ரூ.99,990-ஆக உள்ளது. மேலும் இந்த AKAI டிவிகளை எலக்ட்ரானிக்ஸ் மார்ட் இந்தியா (Electronics Mart India) மற்றும் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் வாங்கலாம்.

photo credit: AKAI, 91mobiles.com

Best Mobiles in India

English summary
100 inch AKAI 4K QLED TV launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X