பழைய 43-இன்ச் TV-க்கு டாட்டா.. ஆபர் விலையில் 55, 75, 100-இன்ச் டிவிகளை இறக்கிய Hisense.. Dolby Atmos சவுண்ட்!
ஹைசென்ஸ் நிறுவனமானது - கேமிங், இமேஜ் குவாலிட்டி மற்றும் ஸ்மார்ட் அம்சங்களில் கவனம் செலுத்தும் புதிய மாடல்களுடன் தனது பிரீமியம் ஸ்மார்ட் டிவி சீரீஸை விரிவுபடுத்தி உள்ளது. இந்தியாவில் ஹைசென்ஸின் புதிய யு7எஸ்இ144ஹெர்ட்ஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸ் (Hisense U7SE 144Hz ULED Mini-LED TV) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சீரீஸில் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச் மற்றும் 100-இன்ச் ஸ்க்ரீன் அளவுகளை கொண்ட மாடல்கள் வாங்க கிடைக்கிறது. இந்த சீரீஸில் மினி-எல்இடி பேக்லைட்டிங், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஏஐ-பவர்டு பிக்ச்சர் பிராசஸிங் மற்றும் டெவியாலெட்டால் ட்யூன் செய்யப்பட்ட பில்ட்-இன் சப்வூஃபர் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த டிவிகளில் VIDAA ஸ்மார்ட் டிவி பிளாட்ஃபார்ம், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல்கள் மற்றும் பல HDR ஃபார்மட்களுக்கான ஆதரவும் கிடைக்கிறது.

இந்தியாவில் ஹைசென்ஸ் யு7எஸ்இ144ஹெர்ட்ஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸ் மாடல்களின் விலை, விற்பனை, ஆபர்: இந்த டிவி சீரீஸின் அறிமுக விலை ரூ.63,990 இல் தொடங்குகிறது. முன்னரே குறிப்பிட்டப்படி இது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச் மற்றும் 100-இன்ச் ஸ்க்ரீன் சைஸ்களில் கிடைக்கிறது.
இவைகால் இந்தியா முழுவதும் உள்ள சத்யா, நந்திலாத், மைஜி, கிரேட் ஈஸ்டர்ன், பத்ரா எலக்ட்ரானிக்ஸ், கோஸ்லா மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட ரீடெயில் பார்ட்னர்கள் உள்ளிட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை வழிகள் மூலம் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கான அறிமுகச் சலுகைகளில், ரூ. 10,000 வரையிலான கேஷ்பேக் சலுகைகள், 40 சதவீதம் வரையிலான தள்ளுபடிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாங்குதல்களுக்கு முன்பணம் செலுத்த தேவையில்லாத விருப்பங்கள் ஆகியவை அடங்கும்.
ஹைசென்ஸ் யு7எஸ்இ144ஹெர்ட்ஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸ்-ன் முக்கிய அம்சங்கள்: இந்த டிவி சீரீஸ் ஆனார் ஃபுல் அரே லோக்கல் டிம்மிங் தொழில்நுட்பத்துடன் கூடிய யுஎல்இடி மினி-எல்இடி பேனல்களை கொண்டுள்ளது. மேலும் இந்த டிவிகளால், இருண்ட மற்றும் பிரகாசமான காட்சிகளில் கான்ட்ராஸ்ட்டை மேம்படுத்தவும், அதிக விவரங்களை வெளிப்படுத்தவும், மல்டிபிள் ஸோன்களில் பிரகாசத்தை கட்டுப்படுத்தவும் முடியும்.
55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் மாடல்கள் நேட்டிவ் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கின்றன, அதே நேரத்தில் 100-இன்ச் மாடல் ஆனது நேட்டிவ் 165ஹெர்ட்ஸ் கேம் மோட்-ஐ கொண்டுள்ளது. இந்த சீரிஸ் HDR10+ அடாப்டிவ், டால்பி விஷன் IQ, HDR10 மற்றும் HLG ஃபார்மட்களை ஆதரிக்கிறது.
மேலும் ஹைசென்ஸ் நிறுவனமானது, ஃபிலிம்மேக்கர் மோட் மற்றும் பேன்டோன் வேலிடேஷனுடன் கூடிய Hi-QLED கலர் தொழில்நுட்பத்தையும் சேர்த்துள்ளது. இந்த சீரீஸ்-க்கு ஹைசென்ஸ் நிறுவனத்தின் Hi-View AI இன்ஜின் ஆற்றல் அளிக்கிறது, இது காட்டப்படும் கன்டென்ட்டின் அடிப்படையில் இமேஜ் குவாலிட்டி, கான்ட்ராஸ்ட் மற்றும் கலர் செட்டிங்ஸ் -ஐ தானாகவே சரிசெய்கிறது. 100-இன்ச் மாடல் மிகவும் மேம்பட்ட Hi-View AI இன்ஜின் ப்ரோவை கொண்டுள்ளது.
ஏஐ அம்சங்களை பொறுத்தவரை இது ஏஐ பிக்ச்சர், ஏஐ கான்ட்ராஸ்ட், ஏஐ கலர், ஏஐ கிளாரிட்டி அப்ஸ்கேலிங், ஏஐ எச்டிஆர் அப்ஸ்கேலர் மற்றும் சுற்றுப்புற ஒளி நிலைகளுக்கு ஏற்ப பட அமைப்புகளை மாற்றியமைக்கும் ஏஐ ஆர்ஜிபி லைட் சென்சார் ஆகியவைகள் உள்ளன
மேலும் இந்த டிவி சீரீஸ் ஆனது வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் தொழில்நுட்பம், HDMI 2.1 இணைப்பு மற்றும் இணக்கமான கேமிங் டிவைஸ்களுக்கான AMD FreeSync பிரீமியம் ஆகியவற்றையும் ஆதரிக்கின்றன. இந்த சீரீஸ் VIDAA ஸ்மார்ட் OS இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல்களையும் ஆதரிக்கிறது. இந்த சாஃப்ட்வேர் - ஒருங்கிணைந்த இன்டர்பேஸ் மூலம் ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் ஸ்மார்ட் டிவி ஆப்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.
ஆடியோவை பொறுத்தவரை, ஹைசென்ஸ் யு7எஸ்இ சீரீஸ் ஆனது Devialet-ஆல் ட்யூன் செய்யப்பட்ட பில்ட்-இன் சப்வூஃபர் உள்ளது மற்றும் இது டால்பி அட்மாஸை ஆதரிக்கிறது. கூடுதல் ஸ்பீக்கர்கள் தேவைப்படாமல், ஆழமான பாஸ் மற்றும் மிகவும் ஆழ்ந்த கேட்கும் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த ஒருங்கிணைந்த சவுண்ட் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹைசென்ஸ் கூறுகிறது.


Click it and Unblock the Notifications