100 மணி நேர பேட்டரி.. வந்த வேகத்தில் ரூ.1000 டிஸ்கவுண்ட்.. Nothing CMF-ன் புதிய ஹெட்போன்!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எப் (CMF) நிறுவனம் ஆனது அதன் லேட்டஸ்ட் ஆடியோ தயாரிப்பான சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ (CMF Headphone Pro) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த செப்டம்பர் 2025 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இது "அதே அம்சங்களுடன்" இந்திய சந்தைக்கும் வந்துள்ளது
இந்தியாவில் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவின் விலை ரூ.7,999 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெட்ஃபோன்கள் ஜனவரி 20 ஆம் தேதி முதல் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.6,999 என்கிற அறிமுக விலையில் விற்கப்படும்.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ மாடலை பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்கலாம். சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ அது டார்க் கிரே, லைட் கிரீன் மற்றும் லைட் கிரே ஆகிய கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.
சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ விரிவான அம்சங்கள் (CMF Headphone Pro Features):
- இது ஏஎன்சி ஆதரவு உடன் வருகிறது, இது தேவையற்ற சுற்றுப்புற ஒலியை 40dB வரை குறைப்பதாக கூறப்படுகிறது
- இதில் ஹைப்ரிட் ஏஎன்சி (Hybrid ANC) அம்சமும் உள்ளது
- இதில் ஒரு ரோலர் டயலும் உள்ளது, இது பயனர்கள் ஒலியளவை சரிசெய்யவும், ஏஎன்சி-ஐ மாற்றவும், இசையை இயக்கவும் அல்லது இடைநிறுத்தவும் அனுமதிக்கிறது.
- எனர்ஜி ஸ்லைடர் (Energy Slider) உள்ளது. இது பயனர்கள் அவர்கள் கேட்கும் டிராக்கின் அடிப்படையில் பாஸ் மற்றும் ட்ரெபிள் நிலைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
- ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) அல்லது ஏஐ அசிஸ்டென்ட்டை ஆக்டிவேட் செய்வது போன்ற அம்சங்களுக்கு விரைவான அணுகலை வழங்கும் கஸ்டமைசபிள் பட்டன் உள்ளது.
- விருப்பப்படி கண்ட்ரோல்களை நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) மூலம் கஸ்டமைஸ் செய்யலாம்
- குறைவான சிதைவு மற்றும் கூர்மையான தெளிவுக்காக நிக்கல் பூசப்பட்ட டயாபிராம்களுடன் 40 மிமீ ட்ரைவர்கள் உள்ளன.
- இது SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது
- ஹை ரெஸ் ஆடியோ பிளேபேக்கையும் (Hi Res Audio Playback) ஆதரிக்கிறது
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 மணிநேரம் வரை பிளேபேக் மற்றும் 50 மணிநேர டால்க் டைம் (Talk time)
- ஏஎன்சி (ANC - Active Noise Cancellation) இயக்கப்பட்டிருக்கும் போது பிளேபேக் நேரம் 50 மணிநேரமாக குறையும்
- இது ஆடியோ பிளேபேக்கிற்கான யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டியையும், சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கிறது.
- ஐந்து நிமிட குவிக் சார்ஜிங் உடன் 5 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன
- முழுமையாக சார்ஜ் ஆக சுமார் இரண்டு மணிநேரம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவின் ஹைலைட்ஸ்: சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவில் 40 மிமீ டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 40dB வரையிலான ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) மற்றும் எல்டிஏசி கோடெக் (LDAC codec) உடன் ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக்கையும் (Hi-Res Audio playback) ஆதரிக்கிறது. மேலும் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ ஆனது ஒரே சார்ஜில் 100 மணிநேர ஆடியோ பிளேபேக்கையும், 50 மணிநேரம் வரை டாக் டைமையும் வழங்கும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது


Click it and Unblock the Notifications








