ஜேம்ஸ் பான்ட் பயன்படுத்திய சாகசக் கருவிகள் : அன்றும்…. இன்றும்..!

  கடந்த 50 ஆண்டுகளில் 23 ஜேம்ஸ்பான்ட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு திரைப்படத்திலும் ஜேம்ஸ்பான்ட் விதவிதமான கருவிகளையும், சாதனங்களையும் பயன்படுத்தி சாகசங்கள் புரிவது வழக்கம்.

  ஜேம்ஸ் பான்ட் பயன்படுத்திய சாகசக் கருவிகள் : அன்றும்…. இன்றும்..!

  ஜேம்ஸ்பான்ட் நடித்த திரைப்படத்திற்காக வடிவமைக்கப்பட்ட பல கருவிகள் நம்முடைய நிஜ வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம். கருவியின் பெயரும், அது பயன்படுத்தப்பட்ட திரைப்படத்தின் பெயரும் அப்படம் வெளிவந்த ஆண்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஜேம்ஸ்பான்ட் Homing beacon, Goldfinger (1964)

  Goldfinger திரைப்படத்தில் ஜேம்ஸ்பான்ட் எதிரிகள் கண்டறியாத வகையில் உளவு பார்க்கும் கருவிகளை பயன்படுத்தியிருப்பார். கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் கருவிகள் இன்று அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கின்றன. டிஜிட்டல் ஏஞ்சல் (Digital Angel) நிறுவனம் தயாரிக்கும் கருவிகள் நவீன பயன்பாட்டு செயலிகளுடன் கிடைக்கின்றன. செயற்கைக் கோள் உதவியுடன் கண்காணிக்கும் கருவிகளையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.

  ஜேம்ஸ்பான்ட் - Lasers, Goldfinger (1964)

  Goldfinger திரைப்படத்தில் வில்லன், கதாநாயகன் ஜேம்ஸ் பான்டை இரண்டாகப் பிளக்க முயற்சி செய்ய லேசர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். கடினமான பொருட்களையும் ஊடுறுவும் லேசர் தொழில்நுட்பக் கருவிகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இணைய தளங்களில் தேடினால் கண்டடையலாம்.

  சிறிய ரிமோட் - Remote-Controlled Doors, Thunderball (1965)

  1965 ஆம் ஆண்டு வெளிவந்த Thunderball திரைப்படத்தில் இடம் பெற்ற வில்லன் பாத்திரம் தன்னுடைய கையில் உள்ள சிறிய ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன்னுடைய ரகசிய அறையின் கதவுகளைத் திறக்கும் பொழுது வியப்புடன் பார்த்தோம். தற்போது பல பெரிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கதவுகள் ரிமோட் கண்ட்ரோல் தொழில் நுட்பத்துடன் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதைப் பார்க்க முடிகிறது.

  சிறிய விமானம் -Gyroplane, You Only Live Twice (1967)

  "You Only Live Twice " என்னும் திரைப்படத்தில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வான் படைத் தளபதி கென் வாலிஸ் ( Ken Wallis) என்வரால் உருவாக்கப்பட்ட Wallis WA-116 ரக சிறிய விமானம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த விமானத்திற்கு லிட்டில் நெல்லி என ரகசியக் குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டு இருக்கும். ஹெலிகாப்டர் வடிவில் இருக்கும் இந்தச் சிறிய விமானம் வழியாக, ராக்கெட், இயந்திரத் துப்பாக்கி, ஏவுகணை, நெருப்பு வீச்சு என பல தாக்குதல்களை நிகழ்த்துவதாகப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இது போன்ற சிறிய தாக்குதல் விமானங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

  கைரேககைப் பதிவு- Fingerprint Scanner, Diamonds Are Forever (1971)

  "Diamonds Are Forever " என்னும் திரைப்படத்தில், போலியான

  கைரேககைப் பதிவுகளைப் பயன்படுத்தி ஸ்கேன்னர் கருவிகளை ஏமாற்றுவது போன்று காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இன்றைய நாளில் ஸ்கேனிங் மற்றும் விரல்ரேகைப் பதிவுத் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ளது.

  உளவு பார்க்கும் கேமரா-Minox Camera, On Her Majesty's Secret Service (1969)

  "On Her Majesty's Secret Service " என்னும் திரைப்படத்தில் Minox A IIIs என்னும் சிறிய உளவு பார்க்கும் கேமராவைப் பயன்படுத்தியிருப்பார் ஜேம்ஸ் பான்ட். 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் உளவு பார்க்கும் கேமராக்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. இன்றைய நாட்களில் விதம் விதமாக மிகச் சிறிய அளவிலான உளவு பார்க்கும் கேமராக்கள் விற்பனைக்கு உள்ளன.

  வாக்கி டாக்கி -Seiko Wristwatch, For Your Eyes Only (1981)

  Seiko H357 5040 என்னும் கைக் கடிகாரத்தை "For Your Eyes Only" திரைப்படத்தில் ஜேம்ஸ்பான்ட் பயன்படுத்தி அசத்தியிருப்பார். டிஜிட்டல் மெசேஜ், வாக்கி டாக்கி எனப் பலவிதங்களில் அந்தக் கைக் கடிகாரத்தை உபயோகப்படுத்தி இருப்பார். இன்றும் இது போன்ற கைக் கடிகாரங்கள் நவீன வசதிகளுடன் தயாரிப்பிலும் விற்பனையிலும் சக்கைப் போடு போடுகின்றன.

  கண்ணாடி-Polarizing Sunglasses, A View to a Kill (1985)

  "A View to a Kill " திரைப்படத்தில் கருப்புக் கண்ணாடிகளையும் உடுறுவி உள்ளிருக்கும் காட்சிகளைத் தெளிவாகப் பார்க்கும் கண்கண்ணாடியை அணிந்து கலக்கியிருப்பார் பான்ட். ஆக்லே (Oakley) நிறுவனம், ஊடுறுவும் லென்சுகளுடன், ஹெட்போன், மியூசிக் பிளேயர் போன்றவற்றுடன் இணைந்த கண் கண்ணாடிகளைத் தயாரித்து விற்பனை செய்கிறது.

  மோதிரக் கேமராக்கள்-Ring camera, A View to a Kill (1985)

  "A View to a Kill" திரைப் படத்தில் மிகச்சிறிய வடிவிலான கேமராக்களைப் பயன்படுத்தியிருப்பார் பான்ட். மிகச்சிறிய வடிவிலான கேமராக்கள் இன்று எளிதாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. மோதிரக் கேமராக்கள் ("Camer-ing,") மூலமாக டிஜிடல் புகைப்படங்கங்களை எடுக்க முடியும். இத்தகைய மோதிரக் கேமராக்களை Hyeonsik Studio & Jeon Yengwon நிறுவனம் வடிவமைக்கிறது.

  மொபைல் போன்கள் -Sony Ericsson K800, Casino Royale (2006)

  2006 ஆம் ஆண்டு வெளிவந்த "Casino Royale" திரைப்படத்தில் ஜேம்ஸ்பான்ட் பயன்படுத்திய Sony Ericsson K800i மொபைல் போன் பரபரப்பாகப் பேசப்பட்டது. GPS வசதி, 3.2 மெகாபிக்சல் கேமரா என்று பந்தா காட்டியது அந்த போன். இன்று அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பல்வேறு வகையான மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மொபைல் போன்கள் வரிசை கட்டி நிற்பதை நாம் அறிவோம்.

  Profile Touchscreen, Casino Royale (2006)

  Casino Royale திரைப்படத்தில் சந்தேகத்திற்கு உரிய நபர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டிச் சேகரிப்பதற்காக ஜேம்ஸ்பான்ட் நியமித்த ஆட்கள் புரொஃபைல் தொடுதிரைக் கருவியை (Profile Touchscreen Device) பயன்படுத்தி இருப்பார்கள். இக்கருவி Microsoft-Samsung PixelSense-ஐ அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

  Jetpack, Thunderball (1965).

  "Thunderball" திரைப்படத்தில் குறைந்த திறன் கொண்ட ராக்கெட் புரொபல்சன் இயந்திரத்தை முதுகில் கட்டிக்கொண்டு ஹாயாக வானத்தில் வட்டமிடுவார் ஜேம்ஸ்பான்ட். இந்த Rocket Belt அல்லது லூனார் பறக்கும் வாகனம் (LFV) நாசா நிறுவனத்துக்காக பெல் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துக் கொடுத்த வாகனத்தின் மாதிரியாகும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  10 James Bond Gadgets That Actually Exist And One That Needs To: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more