நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 10 சூப்பர் கேஜெட்கள்.! வீடுகளில் கட்டாயம் தேவைப்படும்.!

|

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து இடங்களிலும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக கூர்காக்கள் சென்று சிசிடிவி கேமராக்கள் வந்தது. ஆட்டோக்காரர்கள் ஆலோசனை சென்று கூகுள்மேப்டி அட்வைஸ் வந்தது.

போஸ்ட் மேன்

குறிப்பாக போஸ்ட் மேன் எப்போது வீட்டுக்கு வருவார் லெட்டர் எப்போது கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு சென்று மொபைல் போனும் மெசேஜ்-ம் வந்தது. மேலும் சில நேரங்களில் எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ்கள் தான் நமக்கு நேர இருக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்றே கூறலாம்.

அதேபோல் உங்களது வீட்டுக்கு பயன்படும் பல கேஜெட்கள் வந்துவிட்டன. இப்போது உங்கள் இல்லத்திற்கு பயன்படும் அருமையான கேஜெட்களைப் பார்ப்போம்.

இந்த Vivo போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா?இந்த Vivo போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா?

ஸ்மார்ட் டோர் லாக்

ஸ்மார்ட் டோர் லாக்

உங்களது வீடுகளுக்கு இதுபோன்ற ஸ்மார்ட் டோர் லாக் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பா கைரேகைசென்சார், ஆர்எஃப்ஐடி கார்ட், பின், ஒடிபி போன்ற ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டோர் லாக் வருவதால் பயன்படுத்த அருமையாக இருக்கும்.

பின்பு இதுபோன்ற ஸ்மார்ட் டோர் லாக் புளூடூத்
ஆதரவையும் கொண்டுள்ளன. எனவே இதை ஸ்மார்ட்போன் மூலம் இணைத்து பயன்படுத்த முடியும்.

வெறும் 4 நிமிடத்தில் இவ்வளவு சதவீதம் சார்ஜ் ஆகுதா? மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!வெறும் 4 நிமிடத்தில் இவ்வளவு சதவீதம் சார்ஜ் ஆகுதா? மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!

ஸ்மார்ட் வீடியோ டோர்பெல்

ஸ்மார்ட் வீடியோ டோர்பெல்

வீட்டில் ஸ்மார்ட் டோர் பெல்களை நிறுவுவதன் மூலம் நீங்கள் கதவை திறப்பதற்கு முன், உங்கள் கதவுக்கு வெளியே யார் நிற்கிறார்கள் என்பதை அறியமுடியும்.

குறிப்பாக உங்கள் வீட்டிற்குள் அமைந்துள்ள மானிட்டர் யூனிட் மூலம், வெளிப்புற யூனிட்டில் உள்ள இன்பில்ட் கேமரா வழியாக அவர் யார் என்பதைபார்க்க முடியும்.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

ஸ்மார்ட் பல்புகள்

ஸ்மார்ட் பல்புகள்

இப்போது மக்கள் தங்களது வீடுகளில் ஸ்மார்ட் எல்இடி பல்புகளை அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். சாதாரண பல்புகளை விட இவை பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது. இவற்றில் wi-fi மற்றும் அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் இடம் பெற்று உள்ளது. குறிப்பாக ஸ்விட்ச் பயன்படுத்தாமலே உங்களால் லைட்டினை எரிய வைக்க முடியும்.

அதேபோல் ஸ்மார்ட் பல்புகளின் பிரைட்நஸ்-ஐ ஸ்மார்ட்போன் மூலமே எளிதாக சரிசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேம் ரொம்ப முக்கிய மக்களே: ரூ.15,000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!ரேம் ரொம்ப முக்கிய மக்களே: ரூ.15,000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

ரோபோடிக் வாக்யூம் கிளீனர்

ரோபோடிக் வாக்யூம் கிளீனர்

அனைவருக்கும் ரோபோடிக் வாக்யூம் கிளீனர் பற்றி தெரிந்திருக்கும். அதாவது ஒரு பட்டனை கிளிக் செய்தால் போது உங்களது வீட்டை எளிமையாக சுத்தம் செய்ய உதவும் இந்த ரோபோடிக் வாக்யூம் கிளீனர்.

மின் கட்டண மோசடி- லட்சக் கணக்கான ரூபாய் அபேஸ்: நீங்க இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!மின் கட்டண மோசடி- லட்சக் கணக்கான ரூபாய் அபேஸ்: நீங்க இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

 ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்

ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்

கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா போன்ற பல வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுகொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இந்திய சந்தையில் அதிகம் கிடைக்கின்றன. இவை மிகவும் பயனுள்ள வகையிலும், சுலபமாகவும் பயன்படுத்த முடியும்.

வருது வருது விலகு விலகு: சீனாவில் ஹிட் அடித்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் OPPO!வருது வருது விலகு விலகு: சீனாவில் ஹிட் அடித்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் OPPO!

ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமராக்கள்

ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமராக்கள்

அதிகரித்து வரும் குற்றங்களை பெரும்பாலும் தடுக்க முடியாது என்றாலும், அவற்றை கட்டுப்படுத்த இதுபோன்ற செக்யூரிட்டி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும் இந்திய சந்தையில் இதுபோன்ற செக்யூரிட்டி கேமராக்கள் அதிகம் உள்ளன.

குறிப்பாக உங்கள் வீட்டை கண்காணிக்க இந்த செக்யூரிட்டி கேமராக்கள் அதிகம் உதவுகின்றன என்றே கூறலாம்.

IRCTC Rules: ரயிலில் பயணிக்க 'இது' கட்டாயமா? மிடில் பெர்த் ரூல்ஸ்-னா என்ன தெரியுமா?IRCTC Rules: ரயிலில் பயணிக்க 'இது' கட்டாயமா? மிடில் பெர்த் ரூல்ஸ்-னா என்ன தெரியுமா?

 ஸ்மார்ட் வாஷிங் மெஷின்கள்

ஸ்மார்ட் வாஷிங் மெஷின்கள்

ஸ்மார்ட் வாஷிங் மெஷின்கள் உங்களது வேலையை எளிமையாக்குகிறது என்றே கூறலாம். அதாவது இதுபோன்ற வாஷிங் மெஷின்களை ஸ்மார்ட்போன்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். எனவே நீங்கள் நினைத்த நேரத்தில் வேலையை முடிக்கலாம்.

ஸ்மார்ட் ஃபேன்கள்

ஸ்மார்ட் ஃபேன்கள்

சீலிங் ஃபேன்கள் தற்போது பல்வேறு டெக்னாலஜிகளுடன் வந்துவிட்டன. அதாவது பல இடங்களில் ஸ்மார்ட் ஃபேன்கள் கிடைக்கின்றன. இதை ஸ்மார்ட்போன்கள் மூலம் எளிமையாக இயக்க முடியும். குறிப்பாக இதுபோன்ற ஸ்மார்ட் ஃபேன்களை வாங்குவது தான் இப்போது நல்லது.

ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர்கள்

ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர்கள்

மாசுபாட்டின் அபாயத்தை பெரிய அளவிற்கு குறைக்க உதவுகிறது ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர்கள். குறிப்பாக ஏர் பியூரிஃபயர்கள் (Air purifiers) மூலம் நீங்கள் மாசு இல்லாத, சுத்தமான காற்றை பெற முடியும். எனவே இதை உங்கள் வீடுகளில் பயன்படுத்துவது நல்லது.

ஸ்மார்ட் டூத்பிரஷ்

ஸ்மார்ட் டூத்பிரஷ்

ஸ்மார்ட் டூத்பிரஷை ப்ளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்த முடியும் என்ற நிலையில், பல்துலக்கும் போது அழுக்கு படலம் கண்டறியப்படும்போது நீல நிறத்திலும், பின்னர் அதை துடைத்தெறிந்து சுத்தம் செய்தபின்பு வெண்மை நிறமாகவும் ஒளிரும். குறிப்பாக இதை பல்வேறு மக்கள் பயன்படுத்ததுவங்கிவிட்டனர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
10 Gadgets to Make Your Home Smart: Here's the List: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X