தொலைக்காட்சி குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத 10 தகவல்கள்

By Siva
|

தொலைக்காட்சி பெட்டி என்பது இன்றைய மனிதன் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை டிவி ஒன்றுதான் மிகப்பெரிய பொழுதுபோக்கு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

தொலைக்காட்சி குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத 10 தகவல்கள்

உலகின் எந்த மூலையில் நடக்கும் ஒரு விஷயத்தையும் நம் வீட்டு வரவேற்பு அறையில் உட்கார்ந்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் டெக்னாலஜிதான் தொலைக்காட்சி

விரைவில் அறிமுகமாக இருக்கும் 6 / 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் : டாப் 10 பட்டியல்.!

இருப்பினும் தொலைக்காட்சியால் பொன்னான நேரம் வீணாகுவதால் இதை இடியட் பாக்ஸ் என்று வெளிநாட்டினர் கூறுவதுண்டு. இந்நிலையில் வரும் அக்டோபர் 30ஆம் தேதியுடன் தொலைக்காட்சி கண்டுபிடித்து 91 வருடங்கள் பூர்த்தி ஆகின்றது. இந்த நாளில் தொலைக்காட்சி குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஒருசில அரிய தகவல்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிவியில் தெரிந்த முதல் மனித முகம் யார் தெரியுமா?

டிவியில் தெரிந்த முதல் மனித முகம் யார் தெரியுமா?

தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் ஜான் பேயர்டு என்பவர் என்பதை நாம் சிறுவயதிலேயே படித்திருக்கின்றோம். ஆனால் அவர் கண்டுபிடித்த தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித முகம் எது என்று தெரியுமா? ஜான் பேயர்டு அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த வில்லியம் டேய்ண்ட்டான் என்பவருடைய முகம் தான் முதன் முதலில் தொலைக்காட்சியில் தெரிந்தது. மேலும் இதற்காக அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் டிவியில் தெரிந்த முகம் மனித முகமா?

முதன்முதலில் டிவியில் தெரிந்த முகம் மனித முகமா?

ஜான் பேயர்டு தொலைக்காட்சியை கண்டுபிடித்தவுடன் அதன் மூலம் அவர் மக்களுக்கு காட்டிய முகம் ஒரு மனிதனின் முகம் இல்லை. மனித முகம் போன்று டம்மியாக தயார் செய்யப்பட்டிருந்த ஒரு பொம்மை தான் டிவியில் காண்பிக்கப்பட்ட முதல் உருவம். அத்ற்கு ஸ்டூக்கி பில் என்ற பெயர் வைக்கப்பட்டது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிவி மீது ஆர்வமில்லாத பிரிட்டன்வாசிகள்

டிவி மீது ஆர்வமில்லாத பிரிட்டன்வாசிகள்

பிரிட்டனை சேர்ந்த ஜான் பேயர்டு தான் தொலைக்காட்சியை கண்டிபிடித்திருந்தாலும் பிரிட்டன் வாழ் மக்களுக்கு தொலைக்காட்சி மீது அதிக ஆர்வமில்லை. இந்நாட்டு மக்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சியை பார்க்கின்றார்களாம்,.

அமெரிக்க குழந்தைகளுக்கு ஏன் இந்த குரூர எண்ணம்:

அமெரிக்க குழந்தைகளுக்கு ஏன் இந்த குரூர எண்ணம்:

அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தி என்ன என்றால் 5 முதல் 14 வயது வரை உள்ள அமெரிக்க குழந்தைகள் தினமும் 13,000 கொலை சம்பவங்களை அல்லது கொலை சீரியல்களை பார்க்கின்றார்களாம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குரங்கு கைது செய்யப்பட்ட சம்பவம்

குரங்கு கைது செய்யப்பட்ட சம்பவம்

டிவியால் ஒரு குரங்கு கைது செய்யப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், ஆப்பிரிக்காவில் டிவி ஏரியலை திருடியதாக கடந்த 1997ஆம் ஆண்டு ஒரு குரங்கு கைது செய்யப்பட்டு அதன் மீது வழக்கு தொடரப்பட்டது.

டிவி எங்கு அதிகம்

டிவி எங்கு அதிகம்

பிரிட்டன் மக்கள் டிவியை சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 மணி நேரமே பார்ப்பதாக ஏற்கனவே பார்த்தோம். இந்த கணக்கெடுப்பு கடந்த 2004ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இருப்பினும் நாட்டின் மக்கள் தொகைக்கு சரிசமமாக தொலைக்காட்சி இருக்கும் நாடு பிரிட்டன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தொலைக்காட்சியில் தோன்றி முதல் பெட்ரூம் ஜோடி யார்?

தொலைக்காட்சியில் தோன்றி முதல் பெட்ரூம் ஜோடி யார்?

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முதலில் படுக்கையறையில் தோன்றிய காதல் ஜோடி ஃப்ரெட் மற்றும் வில்மா ஃப்ளின்ஸ்டோன் ஜோடிதான். அமெரிக்க தொலைக்காட்சியில் முதன்முதலில் படுக்கை அறையில் தோன்றிய இந்த ஜோடி நீங்கள் நினைப்பதுபோல் மனித ஜோடி அல்ல, இது பிரபலமான கார்ட்டூன் கப்பிள்

டிவியே இல்லாத நாடு எது தெரியுமா?

டிவியே இல்லாத நாடு எது தெரியுமா?

நம்ப முடிகின்றதா, 1987ஆம் ஆண்டு வரை ஒரு நாடு டிவியே இல்லாமல் இருந்திருக்கின்றது. அந்த நாடு ஐஸ்லாந்து

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தொலைக்காட்சி வார்த்தை தோன்றியது எப்போது?

தொலைக்காட்சி வார்த்தை தோன்றியது எப்போது?

தொலைக்காட்சி தோன்றி 91 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் டெலிவிஷன் என்ற ஆங்கில வார்த்தை தோன்றியது 1907ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் சுருக்கமான டிவி என்ற வார்த்தை 1948ஆம் ஆண்டு தான் உருவானது

தொலைக்காட்சியில் கிர்ஸ்டோபர் லாயிட் பங்கு

தொலைக்காட்சியில் கிர்ஸ்டோபர் லாயிட் பங்கு

அமெரிக்காவில் கடந்த 1978 முதல் 1982ஆம் ஆண்டு ஒளிபரப்பான டேக்ஸ் என்ற சீரியலில் Christopher Lloyd என்ற நடிகர் தொலைக்காட்சி குறித்த பல தகவல்களை கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

டிவி என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி விஞ்ஞான் வளர்ச்சியின் முக்கிய பரிணாமங்களில் ஒன்று. இந்த டிவியை அழுதுவடியும் சீரியல்களுக்காக பயன்படுத்தாமல் நல்ல நிகழ்ச்சிகளை பார்த்து அறிவை வளர்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
TV is not always an idiot box. It has a long background with interesting facts. Find them here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X