இந்தியர்களுக்கு அமேசானின் அலெக்ஸா எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா?

|

மூன்று வருடங்களுக்கு முன் அறிமுகமான வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் அமேசான் அலெக்சா , கடந்த ஆண்டு ஆசிய மார்க்கெட்டிலும் நுழைந்து பிரபலமாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு புதுமைகளையும் புதிய வசதிகளையும் புகுத்தி தற்போது இந்திய மார்க்கெட்டிலும் நுழைந்துள்ளது

இந்தியர்களுக்கு அமேசானின் அலெக்ஸா எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா?

இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட்டில் தற்போது உள்ளூர் டிராவல் சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் இணைப்பிலும் உள்ளது.

ஓலா மற்றும் உபேரில் புக் செய்ய உதவுகிறது

ஓலா மற்றும் உபேரில் புக் செய்ய உதவுகிறது

இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் செயலி மூலம் ஓலா மற்றும் உபேர் கேப் சர்வீஸில் புக் செய்யும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. உங்களது ஓலா அல்லது உபேர் அக்கவுண்டை இந்த செயலியுடன் நீங்கள் இணைத்துவிட்டால் இந்த வசதியை நீங்கள் பெற்று கொள்ளலாம்

ஸ்மார்ட் ஹோம் வேண்டுமா?

ஸ்மார்ட் ஹோம் வேண்டுமா?

இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் செயலி மூலம் உங்கள் வீட்டை கூகுள் ஹோம் போன்று நீங்கள் ஸ்மார்ட் வீடாக மாற்றலாம். கூகுள் ஹோம் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அமேசானில் இருந்து பொருட்களை வாங்கலாம்:

அமேசானில் இருந்து பொருட்களை வாங்கலாம்:

இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் செயலி மூலம் அமேசானில் வெகு எளிதாக ஆர்டர் செய்யலாம். உதாரணமாக நீங்கள் ஒரு பல்ப் வாங்க விரும்பினால், இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் ஆப், நீங்கள் இதற்கு முன் வாங்கிய பல்புகளின் விவரத்தை உங்களுக்கு எடுத்து கொடுக்கும்

ஜொமோட்டாவிலும் இயங்கும்

ஜொமோட்டாவிலும் இயங்கும்

மேலும் இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் ஜொமாட்டா இணையதளத்திலும் செயல்படும் எனவே இதன் மூலம் நீங்கள் தேவையான ரெஸ்டாரெண்டுகளில் உணவுகளை ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடலாம். உங்களுக்கு அருகாமையில் உள்ள ரெஸ்டாரெண்டுகளை இவை உங்களுக்கு காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

லைவ் ஸ்கோர்களும் கிடைக்கும்

லைவ் ஸ்கோர்களும் கிடைக்கும்

இந்த அலெக்ஸா வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் மூலம் உங்களுக்கு தேவையான போட்டிகளின் ஸ்கோர்களையும் அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட போட்டியின் ஸ்கோரை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதன் விபரங்களை மட்டும் அளித்தால் போதும்

லேட்டஸ்ட் நியூஸ் வேண்டுமா?

லேட்டஸ்ட் நியூஸ் வேண்டுமா?

உலகில் அவ்வப்போது நடக்கும் லேட்டஸ் செய்திகளையும் இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் உங்களுக்கு தெரியப்படுத்தும். இதனால் நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலக நடப்புகளை தெரிந்து கொள்ளலாம்

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் மிரட்டும் எல்ஜி ஜி7 தின்க் (அம்சங்கள்).!ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் மிரட்டும் எல்ஜி ஜி7 தின்க் (அம்சங்கள்).!

இனிமையான பாடலும் கேட்கலாம்:

இனிமையான பாடலும் கேட்கலாம்:

இந்தியாவில் பிரைம் மியூசிக் இல்லை என்றாலும் நீங்கள் இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் மூலம் ராக், ராகே, எலக்ட்ரானிகா உள்பட பல்வேறு விதமான பிராந்திய பாடல்களையும் கேட்டு மகிழலாம்

ஜோக்குகள் வேண்டுமா?

ஜோக்குகள் வேண்டுமா?

மன அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில் வாய்விட்டு சிரிக்க வைக்கும் ஜோக் வேண்டுமா? அதற்கும் இந்த அலெக்ஸா ஓகே சொல்லி உங்களை சிரிக்க வைக்கும் ஜோக்குகளை அள்ளித்தரும்

கேம்ஸ் வேண்டுமா? கவலையே இல்லை

கேம்ஸ் வேண்டுமா? கவலையே இல்லை

இந்த அலெக்ஸாவில் ஏராளமான கேம்ஸ்கள் கொட்டி கிடப்பதால் நீங்கள் அவற்றில் ஒன்றை தேர்வு செய்து ஓய்வு நேரத்தில் ரிலாக்ஸ் ஆகலாம்

நண்பர்களை, உறவினர்களையும் அழைக்கலாம்.

நண்பர்களை, உறவினர்களையும் அழைக்கலாம்.

இந்த அமேசான் அலெக்ஸா எக்கோவை உங்கள் நண்பர் அல்லது உறவினரும் பயன்படுத்தினால் நீங்கள் இலவசமாக அவரை அழைத்து பேசலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon has announced the expansion of Alexa Skills Kit (ASK) and Alexa Voice Service (AVS) to India so that developers can build new skills and capabilities for Indian consumers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X