1 மில்லியன் Mi பேண்ட் 4 யூனிட்களை விற்ற சியோமி! அப்படி என்ன சிறப்பு இருக்குனு தெரிஞ்சுக்கோங்க!

|

சியோமி நிறுவனம் எட்டு நாட்களில் மில்லியன் Mi பேண்ட் 4 மாடலை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. சீனா சமூக ஊடகமான Weibo தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் சுமார் 5000 Mi பேண்ட் 4 யூனிட்களை விற்பனை செய்து சியோமி வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அம்சங்களுடன் Mi பேண்ட் 4

புதிய அம்சங்களுடன் Mi பேண்ட் 4

சியோமி நிறுவனத்தின் புதுவரவான இந்த Mi பேண்ட்4, 0.95 இன்ச் கலர் AMOLED டிஸ்பிளே, NFC, ஆறு ஆக்ஸிஸ் ஆக்சிலேரோமீட்டர் சென்சார், குரல் கட்டளை வசதிக்காக உள்ளடக்கிய மைக்ரோபோன் போன்ற புதிய அம்சங்களை இந்த பேண்ட்டில் அறிமுகம் செய்துள்ளது.

 Mi பேண்ட் 3 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்

Mi பேண்ட் 3 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்

இந்த புதிய அறிமுகம் 0.78 இன்ச் மோனோக்ரோம் OLED டிஸ்பிளே மற்றும் 80x 128 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட Mi பேண்ட் 3 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.நம் உடலின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது மட்டுமின்றி இந்த பேண்டுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண்ணிற்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் குறித்த அறிவிப்புகளையும் நமக்குத் தெரிவிக்கிறது.

இந்தியாவின் கனவு திட்டம்: இஸ்ரோவிற்கு மேலுமொரு பெரிய சல்யூட் வையுங்கள்.!இந்தியாவின் கனவு திட்டம்: இஸ்ரோவிற்கு மேலுமொரு பெரிய சல்யூட் வையுங்கள்.!

அறிவுரைகளை வழங்கும்  Mi பேண்ட் 4

அறிவுரைகளை வழங்கும் Mi பேண்ட் 4

சைக்ளிங், உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்ற நம் உடலின் நடவடிக்கைகளைக் கங்காணிக்கும் விதத்தில் Mi பேண்ட் 4 இல் ஆறு ஆக்ஸிஸ் ஆசிலேரோமீட்டர் வசதி பொருத்தப்பட்டுள்ளது. பல விதமான நீச்சல் ஸ்ட்ரோக்-கை கண்டுபிடித்து அதற்கேற்ற அறிவுரைகளையும் இந்த பேண்ட் நமக்குக் கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய QR கோடு டிஸ்பிளே சேவை

புதிய QR கோடு டிஸ்பிளே சேவை

மேலும், மொபைல் ட்ராக்கர், மியூசிக் பிளேயர் மற்றும் வெதர் ரிப்போர்டிங் போன்ற பல அம்ஸங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதில் QR கோடுகளை டிஸ்பிளே செய்யும் வசதியும் இருப்பதால் பணம் செலுத்துவது இனி மிகவும் சுலபம். குரல் கட்டளை மூலமாகவும் இந்த ஸ்மார்ட் Mi பேண்ட் மாடலை நாம் கட்டுப்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.

கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ!கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ!

ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை நாள் பயன்படுத்தலாம் தெரியுமா?

ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை நாள் பயன்படுத்தலாம் தெரியுமா?

தடையில்லா இனிப்பு சேவைக்காக, NFC இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகில் இருக்கும் மற்ற சாதனங்களுடன் வேகமாக உங்கள் ஸ்மார்ட் பேண்ட் உடன் இணைத்துக் கொள்ள முடியும். இந்த Mi பேண்ட் 4 மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 20 நாட்கள் வரை தடையில்லாமல் உபயோகிக்கலாம் என்று சியோமி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கால் ஆஃப் டூட்டி கேம்: ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோட் செய்து விளையாடுவது எப்படி? கால் ஆஃப் டூட்டி கேம்: ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோட் செய்து விளையாடுவது எப்படி?

இந்தியாவில் விரைவில்

இந்தியாவில் விரைவில்

NFC வசதி இல்லாத Mi பேண்ட் 4, 169 யுவான் விலையிலும் மற்றும் NFC உடன் கூடிய Mi பேண்ட் 4 229 யுவான் என்ற விலையிலும் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இதன் விலை ரூ.2300 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சந்தையில் Mi பேண்ட் 4 செப்டம்பர் முதல் வாரம் அறிமுகம் செய்யப்படுமென்று தகவல்கள் கசிந்துள்ளது.

Best Mobiles in India

English summary
1 million units of Xiaomi Mi Band 4 sold in 8 days and soon in india : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X