விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்கள் குறித்து கேள்விப்பட்டதுண்டா?

விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்கள்

By Siva
|

கூகுள் பிளே ஸ்டோரில் கோடிக்கணக்கான ஆப்ஸ்கள் கொட்டிக் கிடக்கும்போது யாராவது பணம் கொடுத்து ஆப்ஸை விலைக்கு வாங்குவார்களா? என்ற கேளவி பலரது மனதில் எழும். ஆனால் ஆப்ஸ்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கின்றது என்பதும் அதிலும் விலை உயர்ந்த ஆப்ஸ்களையும் ஒருசிலர் வாங்குவது உண்டும் என்பது தான் உண்மை.

விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்கள் குறித்து கேள்விப்பட்டதுண்டா?

ஒருசில முக்கியமான ஆப்ஸ்களை ஒருசில நூறு ரூபாய் கொடுத்து வேண்டுமானலும் வாங்குவார்கள் என்பதை நம்பலாம், ஆனால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு ஆப்ஸ்கள் இருக்கின்றதா? ஆம், கூகுள் பிளே ஸ்டோரை நீங்கள் நன்கு ஆராய்ந்தால் ரூ.25000க்கும் மேல் விலையுள்ள ஆப்ஸ்கள் உள்ளன என்பது தெரியவரும்

ஒரு ஆப் என்பது உண்மையில் ஒரு விட்ஜெட் என்பது தெரிந்ததே. நீங்கள் செய்யக்கூடிய ஒரு வேலையை உங்களுக்கு எளிமையாக்கி தர உதவுவதே இந்த ஆப். அதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். ஆனால் விலை உயர்ந்த ஆப்ஸ் விலைக்கு வாங்குவது தற்போது பெரிய செல்வந்தர்களால் மட்டுமே நடந்து வருகிறத்.

சாதாரண ஆப்ஸ்-ஐ பயன்படுத்துவதற்கும் விலைக்கு வாங்கிய ஆப்ஸ்களை பயன்படுத்துவதற்கு உள்ள வித்தியாசத்தை உணர முடியும், அதுமட்டுமின்றி விலைக்கு வாங்கி ஆப்ஸ்களை பயன்படுத்துவது ஒரு பெருமையாகவும் கருதப்படுகிறது.

டிஜிட்டல் வேலட்:

டிஜிட்டல் வேலட்:

இந்த ஆப்ஸ் விலை ரூ.2,419 ஆகும். உங்களுடைய வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து கணக்கிடவும், பேலன்ஸ் ஷீட்டுகளை அறியவும், உங்களது கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த டிஜிட்டல் வேலட் உதவுகிறது. மேலும் இந்த டிஜிட்டல் வேலட், உங்களுடைய ஒவ்வொரு பரிவர்த்தனை குறித்த தகவலையும் உங்களுக்கு தெரிவிக்கும். மொத்தத்தில் உங்களுடைய ஆடிட்டர் போல இந்த ஆப் செயல்படும்

டவுன்லோடு

த மோஸ்ட் எக்ஸ்பென்சி ஆப் (The Most Expensive App)

த மோஸ்ட் எக்ஸ்பென்சி ஆப் (The Most Expensive App)

இந்த ஆப்-இன் பெயரே இதுதான். இந்த ஆப் ரூ.26000 விலையை கொண்டது. அப்படி என்ன இந்த ஆப்-இல் இருக்கின்றது என்று கேட்பவர்களுக்கு பதில் இது தான். உங்களுடைய டிஸ்ப்ளேவில் மிக விலையுயர்ந்த வைரங்களை காண்பிக்கும். இதிலிருந்து உங்களை மிகப்பெரிய செல்வந்தர் என்று உங்கள் அருகில் இருப்பவர்கள் நினைப்பார்கள். இதைத்தவிர இந்த ஆப்-ஆல் வேறு எந்த பயனும் இல்லை

டவுன்லோடு

5 மினிட் ஸ்போர்ட்ஸ் மெடிசின்

5 மினிட் ஸ்போர்ட்ஸ் மெடிசின்

ஒரு விளையாட்டு வீரருக்கு தேவையான உடல்நல குறிப்புகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை தெரிந்து வகையில் உள்ளது இந்த ஆப். இதன் விலை ரூ.5491. இந்த ஆப்-இல் மொத்தம் 280 டாப்பிக் இருப்பதால் ஒரு விளையாட்டு வீரருக்கு ஏற்படும் சின்னச்சின்ன பிரச்சனைகளில் இருந்து பெரிய பிரச்சனைகள் வரையிலான அனைத்திற்கும் இதில் தீர்வு கிடைக்கும்

டவுன்லோடு

டாக்டர் வெப் செக்யூரிட்டி ஸ்பேஸ் லைஃப்:

டாக்டர் வெப் செக்யூரிட்டி ஸ்பேஸ் லைஃப்:

ஒரு மொபைலுக்கு வைரஸ் மற்றும் மால்வேர்களால் உண்டாகக்கூடிய ஆபத்துக்கள் அனைத்திலும் இருந்து தடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ஆப், ரூ.4050க்கு கிடைக்கும். ஒரு முழு மொபைலை ஸ்கேன் செய்வது, ஒவ்வொரு ஃபைல்களையும் உடனுக்குடன் ஸ்கேன் செய்வது, பேட்டரியை பாதுகாப்பது உள்பட பல அம்சங்கள் இந்த ஆப் கொடுக்கின்றது.

டவுன்லோடு

த அட்லஸ் ஆஃப் இண்டர்னல் மெடிசின் (The Atlas of Internal Medicine)

த அட்லஸ் ஆஃப் இண்டர்னல் மெடிசின் (The Atlas of Internal Medicine)

இந்த ஆப்-இல் சுமார் 2000 மெடிக்கல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் உள்ளன. அதிநவீன தரத்தில் அமைந்துள்ள இந்த புகைபப்டங்களில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகள் குறித்து படத்துடன் விளக்கபப்ட்டிருக்கும். மனிதன் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மெடிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் இந்த ஆப்-இல் உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

டவுன்லோடு

ஐ யாம் ரிச் மேன் மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் (I'm Rich Man - Most expensive)

ஐ யாம் ரிச் மேன் மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் (I'm Rich Man - Most expensive)

த மோஸ்ட் எக்ஸ்பென்சி ஆப் போலவே தான் இந்த ஆப். ரூ.26000 விலையுள்ள இந்த ஆப், உங்கள் மொபைல் டிஸ்ப்ளேவில் விலை உயர்ந்த கற்களை காண்பித்து உங்களை பணக்காரராக மற்றவர்களுக்கு உணர்த்தும்

டவுன்லோடு

மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் ஆப்:

மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் ஆப்:

இந்த ஆப் ரூ.10000 விலையை கொண்டது. ஏற்கனவே நாம் பார்த்த விலை உயர்ந்த இரண்டு ஆப்ஸ்கள் போலவே இந்த ஆப் எந்தவித பயனையும் தராது. ஆனால் உங்அக்ளை கோடீஸ்வரராக காட்டும் வகையில் உங்கள் மொபைல் போன் டிஸ்ப்ளேவில் விதவிதமான புகைப்படங்களை காண்பித்து அசத்தும்

டவுன்லோடு

Best Mobiles in India

Read more about:
English summary
We have listed some of the most expensive Android apps that you can download on your Android device.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X