Home
Deal of the day

அமேசான்: அசத்தலான அம்சங்களுடன் கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்கள்.!

சியோமி நிறுவனத்தின் அனைத்து ஸமார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் ஸ்மார்ட் டிவி, உட்பட பல்வேறு சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து அதிகளவில் விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தரமான அமச்ங்களுடன் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

அமேசான்: அசத்தலான அம்சங்களுடன் கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் சியோமி நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும்இப்போது அமேசான் தளத்தில் அசத்தலான அம்சங்களுடன் கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி Mi 11X 5G

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட Mi 11X 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் AMOLED Dot டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு,குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட் வசதி, 4520 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்;பான அம்சங்களை கொணடுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி Mi A3

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி Mi A3 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,299-விலையில் வாங்க முடியம். சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour
டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ.

சியோமி Mi 11X Pro 5G

8ஜிபி ரேம் மற்றம் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி Mi 11X Pro 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் AMOLED Dot டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும்1080x2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட் வசதி, 4520 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி Mi 10T 5G

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி Mi 10T 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400x1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற
திரைவிகிதம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டோ-கோர் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

English summary
Xiaomi smartphones available with stunning features on the Amazon site: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X