Home
Deal of the day

தீபாவளி ஆஃபர்னா இதுதான்.. ரூ.4,000 ரேட் கட்.. ரூ.20,999 பட்ஜெட்ல 8850mAh பேட்டரி.. 4 ஸ்பீக்கர்கள்.. எந்த டேப்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale 2025) என்னும் சிறப்பு விற்பனை முடிய இருக்கிறது. இந்த நேரத்தில் தீபாவளி பண்டிகையும் நெருங்குவதால், டேப்லெட் மாடல்களுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் சியோமி பேட் 7 (Xiaomi Pad 7) மாடலுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஏற்கனவே, விலை குறைப்பும் கிடைப்பதால், மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த சியோமி பேட் 7 மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் அறிமுகமான போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.27,999ஆக இருந்தது. ஆனால், ரூ.3,000 நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டு, இப்போது ரூ.24,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

தீபாவளி ஆஃபர்னா இதுதான்.. ரூ.4,000 ரேட் கட்.. ரூ.20,999 பட்ஜெட்ல டேப்!

ஆகவே, ரூ.20,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆப்ஷனில் ஆர்டர் செய்தால் ரூ.4,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,749 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை வாங்கி கொள்ளலாம்.

மேலும், ரூ.23,700 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. கிராஃபைட் கிரே (Graphite Grey), மிராஜ் பர்பிள் (Mirage Purple) மற்றும் சேஜ் கிரீன் (Sage Green) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். போகல் கீ-போர்ட் மற்றும் சியோமி போகஸ் பென் (Xiaomi Focus Pen) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல மெட்டாலிக் பினிஷிங் பாடி கொடுக்கிறது.

சியோமி பேட் 7 அம்சங்கள் (Xiaomi Pad 7 Specifications): இந்த சியோமி டேப்லெட்டில் 11.2 இன்ச் (3200 x 2136 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. சியோமி போகஸ் பென்னில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) வருகிறது.

மேலும், 345 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 800 நிட்ஸ் எச்பிஎம் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக பி3 கலர் காமட், எச்டிஆர்10 (HDR10), ஏஐ எச்டிஆர் (AI HDR) மற்றும் 68.7 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு வெட் டச் (Wet Touch) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கிடைக்கிறது.

ஆகவே, டிஸ்பிளேவில் அவுட்புட் மட்டுமல்லாமல், குவாலிட்டியும் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இந்த பிரீமியம் டிஸ்பிளேவுக்கு ஏற்ப டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட 4 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. மேலும், ஹை-ரெஸ் வயர்லெஸ் ஆடியோ (Hi-Res Wireless Audio) சப்போர்ட் கிடைக்கிறது.

அதேபோல 4 மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 8850mAh பேட்டரி மற்றும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டபுள் சைடு சார்ஜிங் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 7 With 8GB RAM Gets Rs 4000 Flat Discount in Amazon Great Indian Festival Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X