அமேசான்: குறைந்த விலையில் கிடைக்கும் அசத்தலான சியோமி, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ஸ்மார்ட்டிவி, லேப்டாப், டெப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது குறைந்த விலையில் கிடைக்கும் சியோமி, சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ரெட்மி 10 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 17 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி, 6000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் துல்லியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க
முடியும். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
சியோமி 11 லைட் என்இ 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 21 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் வசதி ஸ்மார்ட்போனை வேகமாக செயல்பட அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.24,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 29 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி. கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி
அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். 5ஜி,4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி/ ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். இந்த கேலக்ஸி எம்52 5ஜி சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சிங்கிள்
சார்ஜில் 48 மணிநேர டால்க் டைம் அல்லது 20 மணிநேர வீடியோ பிளேபேக் கிடைக்கும். குறிப்பாகஇந்த சாதனத்தின் எடை 173 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 27 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.1 கஸ்டம் ஸ்கின் மூலம் இயங்கும் இந்த அசத்தலான கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும். சாம்சங் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications