Home
Deal of the day

சும்மா அள்ளி போடுறாங்க.. ரூ.29000 நேரடி விலை குறைப்பு.. 32MP டூயல் செல்பீ கேமராவுடன் வரும் ஷாவ்மீ போன்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 (Great Indian Festival Sale 2025) விற்பனையின் கீழ், ஷாவ்மீ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்று "பாதிக்கு பாதி" என்கிற விலையை விட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 53% நேரடி தள்ளுபடி / விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது.

அது ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த மாடல் இந்தியாவிற்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆன ஸ்மார்ட்போனாகும். ஏனென்றால் ஷாவ்மீ நிறுவனத்தின் சிவி சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகமாகும். ஆனால் சீனாவை தாண்டி அறிமுகமான முதல் மாடல் சிவி சீரிஸ் ஸ்மார்ட்போன் - ஷாவ்மீ 14 சிவி மாடலாகும்.

சும்மா அள்ளி போடுறாங்க.. ரூ.29000 நேரடி விலை குறைப்பு!

அப்படியான ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் எம்ஆர்பி ரூ.54,999 ஆகும். ஆனால் அமேசானில் இப்போது ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது எந்த பேங்க் டிஸ்கவுண்டும் (Bank Discount), கூப்பன் தள்ளுபடியும் (Coupon Offer) இல்லாத நேரடியான ரூ.29,000 விலை குறைப்பாகும்.

ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.55 இன்ச் 1.5கே கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது

இந்த சிப்செட் 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்பனில் வழக்கமான வேப்பர் கூலிங் சிஸ்டம்களை (Vapour Cooling System) விட மூன்று மடங்கு திறமையாக செயல்படுவதாக கூறப்படும் ஐஸ்லூப் (IceLoop) கூலிங் சிஸ்டம் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமராக்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ப்போன் ஆனது சம்மிலக்ஸ் லென்ஸுடன் இணைந்து லைகாவால் வடிவமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எப்/1.63 அபெர்க்ஷர் மற்றும் 25மிமீ சமமான குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 ப்ரைமரி கேமரா உள்ளது

இதனுடன் 2 எக்ஸ் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 12 மெகாபிக்சல் 120 டிகிரி வைட் ஆங்கிள் ஷூட்டரும்உள்ளது. முன்பக்கத்தில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக இரண்டு 32-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் இதுவொரு தரமான கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை, இது 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட 4700mAh பேட்டரியை கொண்டுள்ளது. இப்போது வெளியாகும் 8000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது, இது சிறிய பேட்டரி ஆக தெரியலாம். இருப்பினும் ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்யும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போன் ஆனது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Dolby Atmos Stereo Speakers) கொண்டுள்ளது. மேலும் இது இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ-ஆதரவு கொண்ட ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் (AI Face Unlock System) ஆகிய பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 14 Civi With 32MP Dual Selfie Camera Get Biggest Price Cut in Amazon Great Festival Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X