Home
Deal of the day

ஓடியாங்க! ரூ.3000 டிஸ்கவுண்ட்.. ஸ்பெஷல் ஆன Xiaomi போன்.. 120Hz டிஸ்பிளே, 67W சார்ஜிங், IceLoop கூலிங் சிஸ்டம்!

இந்தியாவில் அறிமுகமான ஒரு ஸ்பெஷல் ஆன ஷாவ்மீ (Xiaomi) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.3000 வரையிலான டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஆபர் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கிறது. என்ன மாடல்? இந்த ஸ்மார்ட்போன் ஏன் ஸ்பெஷல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

ரூ.3000 வரையிலான டிஸ்கவுண்ட்டை பெற்றுள்ளது ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi) ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒரு ஸ்பெஷல் ஆன மாடலாகும். ஏனென்றால் பொதுவாக ஷாவ்மீ சிவி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமே அறிமுகமாகும். ஆனால் ஷாவ்மீ 14 சிவி இங்கே அறிமுகமாகி.. இந்தியாவில் அறிமுகமான முதல் ஷாவ்மீ சிவி ஸ்மார்ட்போன் என்கிற பெயரை தன்வசம் கொண்டுள்ளது.

ஓடியாங்க.. ரூ.3000 டிஸ்கவுண்ட்.. ஸ்பெஷல் ஆன Xiaomi போன்!

என்ன ஆபர்? தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 25% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.40,999 க்கு வாங்க கிடைக்கிறது. அமேசானில் இதன் எம்ஆர்பி ரூ.54,999 என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் இது ரூ.42,999 க்கு தான் அறிமுகமானது. ஆக இதன் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு உள்ளது.

கூடுதலாக ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போன் மீது தற்போது ரூ.3000 தள்ளுபடி கிடைக்கிறது. இது ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ஆபர் விலையாகும். இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கடந்த ஜூன் 2024 இல் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 3 காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று - அதன் அற்புதமான டிசைன் மற்றும் தரமான பில்ட் குவாலிட்டி. இரண்டாவது - அதன் பெரிய மற்றும் பிரகாசமான டிஸ்பிளே. மூன்றாவது - பக்காவான அவுட்புக்களை வழங்கும் அதன் கேமரா செட்டப். இருந்தாலும் கூட இந்த ஸ்மார்ட்போனில் ஒரு சின்ன குறை உள்ளது. அது இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். இது சிலருக்கு இது பெரிய குறையாக கூட தெரியலாம்.

ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.55-இன்ச் 1.5கே கர்வ்டு AMOLED டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ், வழக்கமான வேப்பர் கூலிங் சிஸ்டம்களை விட மூன்று மடங்கு திறமையாக செயல்படுவதாக கூறப்படும் ஐஸ்லூப் (IceLoop) கூலிங் சிஸ்டம் போன்றவைகளை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இபோது சம்மிலக்ஸ் லென்ஸுடன் இணைந்து லைகாவால் வடிவமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எப்/1.63 அபெர்க்ஷர் மற்றும் 25மிமீ சமமான குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார் + 2எக்ஸ் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 12-மெகாபிக்சல் 120 டிகிரி வைட் ஆங்கிள் ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டு 32-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.

இதுதவிர்த்து டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ-ஆதரவு கொண்ட ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்யும்.

English summary
Xiaomi 14 Civi Selling At Discounted Price Rs 42999 with Rs 1000 Bank Offer in Amazon See Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X