ஆர்டர் அள்ள போகுது.. ஆட்டோ போகஸ்.. 150 இன்ச்.. கூகுள் டிவி ஓஎஸ்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் Wzatco நிறுவனத்தின் 4கே ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் கூகுள் டிவி ஒஎஸ், ஆட்டோ போகஸ், டால்பி சரவுண்ட் சவுண்ட் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் Wzatco யுவா ஹொரைசன் (WZATCO Yuva Horizon) மாடலுக்கு 58 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.400 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தைக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Wzatco யுவா ஹொரைசன் அம்சங்கள் (Wzatco Yuva Horizon Projector Specifications): Wzatco யுவா ஹொரைசன் மாடல் 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.
1500 ஏஎன்எஸ்ஐ (1500 ANSI) லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி Wzatco யுவா ஹொரைசன் மாடலில் உள்ளது. கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளை இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமாகப் பார்க்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Wzatco நிறுவனம்.
270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா ஹொரைசன் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் மற்ற ப்ரொஜெக்டர் மாடலை விட இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடல் தனித்துவமானது. அதாவது Wzatco யுவா ஹொரைசன் ப்ரொஜெக்டர் முழுமையாக சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது, இது தூசி படிவதைத் தடுக்கவும், வழக்கமான பராமரிப்பின் தேவையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் Wzatco யுவா ஹொரைசன் மாடல் மூலம் 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் இந்த புதிய ப்ரொஜெக்டர் உடன் கிடைக்கும்.
குறிப்பாக ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance) உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா ஹொரைசன் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு Wzatco யுவா ஹொரைசன் மாடல் வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, சோனிலிவ், ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட அனைத்து ஓடிடி ஆப்களையும் இந்த Wzatco யுவா ஹொரைசன் மாடலில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டால்பி சரவுண்ட் சவுண்ட் (Dolby Surround Sound) ஆதரவு கொண்ட பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இந்த Wzatco யுவா ஹொரைசன் மாடலில் உள்ளன. எனவே இந்த Wzatco யுவா ஹொரைசன் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
மேலும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் Wzatco யுவா ஹொரைசன் மாடலில் உள்ளன. இதுதவிர பல சிறப்பான வசதிகள் Wzatco யுவா ஹொரைசன் மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications