வெச்சான் பாரு விவோ.. ரூ.2,000 ஆஃபரில் 9020mAh பேட்டரி Vivo 5G போன்.. 90W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தில் பெரிய பேட்டரி மாடலாக வெளியாகிய விவோ டி5 ப்ரோ 5ஜி (Vivo T5 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. 9020mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்கிறது. இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி போனின் தள்ளுபடி விவரங்கள் இதோ.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 46 சதவீத தள்ளுபடி விலைக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.29,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 விலைக்கு இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கும்.

விவோ டி5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T5 Pro 5G Specifications): அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டை இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது.
மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்ட டிஸ்பிளே மாடலாகவும் இருக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது.
எப்/1.79 அபெர்சர் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமராவில் எப்/2.4 அபெர்சர் கொடுக்கப்பட்டு உள்ளது. 32 எம்பி செல்பீ கேமராவில் எப்/2.0 அபெர்சர் உள்ளது.
இந்த கேமராவுக்கும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8.25 எம்எம் தடிமன் மற்றும் 213 கிராம் எடை கொண்ட பாடியில் 9020mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) உள்ளது.
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க MIL- STD-810H சர்டிபிகேஷன் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி உள்பட வை-பை 6, ப்ளூடூத் 5.4 மற்றும் ஜிபிஎஸ் கிடைக்கிறது. காஸ்மிக் பிளாக் மற்றும் கிளாசியர் ஒயிட் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் கேமரா பீச்சர்கள், பக்காவான டிஸ்பிளே பீச்சர்கள் மட்டுமல்லாமல், பெரிய பேட்டரி மற்றும் அதிக ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள் இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications