Vivo வெச்சான் பாரு.. ரூ.3,050 ஆஃபரில் 3D டிஸ்பிளே.. 5700mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் வாவ் டீல் சேலில் (Wow Deal Sale) விவோ டி4ஆர் (Vivo T4R) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனில் 5700mAh பேட்டரி கிடைக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,050 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,949 விலைக்கு இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும்.

மேலும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,150 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இந்த டாப் மாடலுக்கு ரூ.3,250 தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆர்டிக் ஒயிட் (Arctic White) மற்றும் டிவைலைட் ப்ளூ (Twilight Blue) கலர்களில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு ஸ்காட் எக்ஸ்என்சேஷன் கிளாஸ் (SCHOTT Xensation Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (4nm Octa Core MediaTek Dimensity 7400) சிப்செட் கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் கேலக்ஸிகோர் ஜிசி02எம்1 (Galaxycore GC02M1) சென்சாருடன் 2 எம்பி பொக்கெ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கிடைக்கிறது.
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் நைட்போட்டோகிராபிக்காக ஸ்டூடியோ ஆரா லைட் (Studio Aura Light) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance), லைவ் போட்டோ (Live Photo) மற்றும் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) கிடைக்கிறது. பிக்சடு போகல் லென்த் கொண்ட மல்டிபோகல் போர்ட்ராய்டு (Multifocal Portrait) கிடைக்கிறது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) டியூரபிலிட்டி கிடைக்கிறது. 7.39 எம்எம் தடிமனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5700mAh பேட்டரி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications








