பர பரனு ஆர்டர்.. வெறும் ரூ.8,999-க்கு 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. Vivo ஸ்மார்ட்போனுக்கு டிஸ்கவுண்ட்!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையில் பெரிய பேட்டரி கொண்ட விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே, பட்ஜெட்டில் களமிறங்கி இந்த ஸ்மார்ட்போன், மேலும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் அசல் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இந்த விலையிலேயே மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

இதேபோல மற்ற வேரியண்ட்களுக்கும் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதாவது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக வாங்கி கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது.
இதிலும் ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த உடனடி டிஸ்கவுண்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு கிடைக்கிறது. மேலும், இதே கார்டுகள் மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.5,490 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது.
விவோ டி4 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T4 Lite 5G Specifications): இந்த விவோ ஸ்மார்ட்போனுக்கு 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. அதேபோல எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷனில் அவுட்புட் கிடைக்கிறது.
ஆனால், இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமே கிடைக்கிறது. லேட்டஸ்ட் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அதேபோல பர்ஃபாமென்ஸ் தரமாகவே எதிர்பார்க்கும்படி (இந்த பட்ஜெட்டில்) இருக்கிறது.
ஏனென்றால், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் 5ஜி (Octa Core MediaTek Dimensity 6300 6nm 5G) சிப்செட் கிடைக்கிறது. ஆனால், இந்த சிப்செட்டில் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, கேமிங் அவுட்புட் ஓரளவுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது தெரிந்துவிட்டது.
விவோ நிறுவனம், எப்போதும் கேமராவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதிலும் அதை செய்துள்ளது. ஏனென்றால், ஏஐ எரைஸ், ஏஐ போட்டோ என்ஹான்ஸ், ஏஐ அல்ட்ரா எச்டி போன்ற பீச்சர்களுடன் கேமராவை கொடுக்கிறது. இதுபோக போர்ட்ராய்டு மோட், சூப்பர் நைட் மோட் போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி பொக்கெ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி சென்சார் கிடைக்கிறது. இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. விவோ நிறுவனத்தின் டி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களாக இருக்கின்றன.
இந்த சீரிஸில் வெளியான டி4 லைட் மாடல் பெயருக்கு ஏற்ப குறைந்த பேட்டரி கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். இதில் 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ப்ரிசம் ப்ளூ (Prism Blue) மற்றும் டைட்டானியம் கோல்டு (Titanium Gold) ஆகிய 2 கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications