Home
Deal of the day

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்.!

விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தரமான டிஸ்பிளே, அருமையான கேமரா வசதி, தனித்துவமான சிப்செட் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன்
வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் விவோ நிறுவனம் அடுத்த ஆண்டு தரமான பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி21 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரு.29,990-விலையில் வாங்க முடியும். விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2404 பிக்சல் தீர்மானம், 800 nits பிரைட்நஸ் வசதி, எச்டிஆர் +, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக விவோ வி21 5ஜி சாதனத்தில் மீடியாடெக் Dimensity 800U பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். விவோ வி21 5ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால்அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. இது தவிர OIS ஆதரவு, டூயல் எல்இடி பிளாஸ் ஆதரவும் இந்த
சாதனத்தில் அடக்கம். விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விவோ Y73 ஸ்மார்ட்போன்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y73 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y73 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர்10 ஆதரவு, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி, Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி, டூயல் சிம், 2.4 / 5 ஜிஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y73 ஸ்மார்ட்போன்.

விவோ எக்ஸ்60

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.34,990-விலையில் வாங்க முடியும். விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம் உடன் பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே
கைரேகை சென்சார், 48 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி இரட்டை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா சேவையும் இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் அம்சம் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ எக்ஸ்60 ப்ரோ

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.49,990-விலையில் வாங்க முடியும். விவோ எக்ஸ் 60 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.56 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, எச்டிஆர் 10 ப்ளஸ் ஆதரவு,
120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவை உள்ளது. இதில் 4200 எம்ஏச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி முதன்மை கேமரா, இரட்டை 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

விவோ Y72 5G

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990-ஆக உள்ளது. பின்பு விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
1,080x2,408 பிக்சல்கள், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி, Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ Y72 5G. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்

English summary
Vivo smartphones available with quality features on the Amazon site: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X