Home
Deal of the day

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்கள்.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான டிஸ்பிளே வசதி, தரமான சிப்செட், அசத்தலான கேமராக்கள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வருகின்றன என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்கள்

மேலும் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y73

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y73 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.20,990-விலையில் வாங்க முடியும். விவோ Y73 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர்10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். விவோ Y73 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y73 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ
கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். விவோ Y73 ஸ்மார்ட்போன் மாடல் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி, டூயல் சிம், 2.4 / 5 ஜிஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y73 ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y72 5G

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.20,990-விலையில் வாங்க முடியும். விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,080x2,408 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11.1 சார்ந்த
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான விவோ Y72 5G ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ Y53s

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y53s ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.18,490-விலையில் வாங்க முடியும். விவோ Y53s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2408×1080 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.
இந்த புதிய விவோ Y53s ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் FunTouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. விவோ Y53s ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். விவோ Y53s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ
ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ Y53s ஸ்மார்ட்போன்.

விவோ Y33s

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y33s ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.18,990-விலையில் வாங்க முடியும். இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080×2408 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக்
ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 மூலம் இயக்கப்படுகிறது. விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ
கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும். விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸகேனர், ஆக்ஸிலரோ மீட்டர், ஆம்பியண்ட் லைட்
சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காமர்ஸ் மற்றும் கைரோஸ்கோப் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன். டூயல்-சிம், 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன்.

English summary
Vivo smartphones available at discounted prices on the Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X